Terrorist Attack: ஜம்மு காஷ்மீர் பகல்ஹாம் சுற்றுலா தளத்தில் இன்று தீவிரவாதிகளின் தாக்குதல் நடந்திருப்பது இந்தியா முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
ராணுவ வீரர்கள் போல் உடை அணிந்து வந்த தீவிரவாதிகள் இப்படி ஒரு கொடூர செயலை நிகழ்த்தியுள்ளனர். அவர்கள் சுற்றுலா பயணிகளை குறிவைத்து தான் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர்.
இதில் 25 இருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் கவலைக்கிடமான நிலையில் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்
மேலும் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் குற்றவாளிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொடூர தாக்குதலுக்கு தற்போது அரசியல் தலைவர்கள் அனைவரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இப்படி ஒரு செயலை செய்தவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பக்கூடாது. செய்த பாவத்திற்கான தண்டனையை அனுபவிக்க வேண்டும் என ஒட்டுமொத்த இந்தியாவும் தற்போது கொந்தளித்துள்ளது.
இதனை அடுத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தற்போது சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். மேலும் இந்த தாக்குதல் இந்துக்களை குறி வைத்துதான் நடந்துள்ளது.
நீங்க முஸ்லிம் இல்லை என்று சொல்லி தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீருடன் புலம்பும் வீடியோக்களும் வைரலாகி வருகிறது.