எதிர்நீச்சல் மணிவிழா அசிங்கப்பட்ட குணசேகரனின் தும்பிகள்.. அறிவாளிய கூட்டிட்டு வாங்கன்னு விரட்டிவிட்ட மனைவிமார்கள்

எதிர்நீச்சல் 2 ஒரு பக்கம் டல் அடித்தாலும் மறுபக்கம் வாயாடி நந்தினி, நக்கல் நையாண்டி பண்ணிக் கொண்டு திரிகிறார். சைக்கிள் கேப்பில் குணசேகரனை கலாய்த்து சிரிப்பு மூட்டுகிறார். குளிக்கப் போகும் குணசேகரனிடம் காக்கா குளியலுக்கு ஒரு பக்கெட் போதும் என்று நக்கல் அடிக்கிறார்.

இப்படி போய்க்கொண்டிருக்கும் எதிர்நீச்சல் மறுபக்கம் குணசேகரனுக்கு மணிவிழா எடுக்கும் முயற்சியில் இறங்கி வருகிறது. வீட்டிற்கு வந்த ஜோசியக்காரர் குணசேகரனுக்கு நேரம் சரியில்லை. ஒரு பூஜையை போட்டு மணிவிழா எடுக்க வேண்டும் என கூறிவிட்டு செல்கிறார்.

இதனால் தனது விழுதுகளான தம்பிகளை குணசேகரன் அவர்களது மனைவியிடம் பேசுமாறு ஏவி விடுகிறார். புதிர் போட்டு மனைவிமார்களிடம் பேசி அசிங்கப்பட்டு நிற்கிறார்கள் வளர்ப்பு தும்பிகள். அண்ணனுக்கு மணிவிழா எடுக்க வேண்டும் என்று கூறியதும் ஜனனி முதல் நந்தினி வரை எதிர்த்து நிற்கிறார்கள்.

ஒரு படி மேலே சென்ற ரேணுகா மணிவிழா என்றால் என்னன்னு தெரியுமா என கேட்டு கணவன்மார்கள் அனைவரையும் வெளுத்து வாங்குகிறார். என்னன்னு தெரியாமலேயே பேச வந்த தம்பிகள் முழித்து நிற்கிறார்கள். போய் அறிவாளிகளை கூட்டிட்டு வாருங்கள் என அசிங்கப்படுத்திவிட்டார் ரேணுகா.

மணிவிழா என்றால் அறுபதாம் கல்யாணம். சந்தோசமாக வாழ்ந்த கணவன் மனைவி இருவரும் கல்யாண வாழ்க்கையில் திருப்தி அடைந்து எடுக்கக்கூடிய ஒரு விழா. உங்கள் அண்ணன் குணசேகரன் சரியான ஆள் இல்லை. இவர்கள் என்ன சந்தோசமாக வாழ்ந்து விட்டார்கள் மணிவிழா எடுப்பதற்கு என கேட்க வந்த கணவன்மார்களுக்கு அடி விழாத குறையாய் டோஸ் விட்டார் ரேணுகா.