Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மீனா பூ கட்டுற வேலையை விட்டுவிட்டு, வீட்டு வேலைக்காரி ஆக தான் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட விஜயா, சிந்தாமணி மூலம் மீனா கொண்டு போன பணத்தை திருட சொல்லிவிட்டார். இதனால் பணத்தை ஏமாந்து போன மீனா வீட்டிற்கு வந்த நிலையில் அண்ணாமலை ஆறுதல் சொல்லி விஜயாவிடம் இருந்து நகையை வாங்கி கொடுக்க முயற்சி எடுக்கிறார்.
ஆனால் விஜயா என்னால் என்னுடைய நகையை கொடுக்க முடியாது, நான் ஏன் அவளுக்கு கொடுக்க வேண்டும். அளவுக்கு மீறி பேராசை பட்டால் இப்படித்தான் நிலைமை மோசமாக இருக்கும். தன்னால் என்ன முடியுமோ அதை வைத்துவிட்டு வாழனும் என்று வாய்க்கு வந்தபடி திட்ட ஆரம்பித்து விட்டார். உடனே மீனா, எனக்கு அவங்களோட நகை வைத்து தான் கடனை அடைக்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை.
நான் பட்ட கடனை எப்படி அடைக்க வேண்டும் என்று எனக்கு தெரியும், அதனால் அவர்கள் நகை எனக்கு வேண்டாம் என்று மாமனாரிடம் சொல்லிவிட்டார். அடுத்ததாக மீனாவை பார்க்க வந்த மீனாவின் அம்மா, தங்கை மற்றும் தம்பியை அனைவர் முன்னாடியும் வழக்கம் போல் விஜயா அவமானப்படுத்தி பேசுகிறார். பிறகு முத்து சாப்பிட்டு போங்க என்று சொல்லிய நிலையில் விஜயா அவளை சமைக்க முடியாத நிலையில் இருக்கா அப்புறம் யார் சமைச்சு கொடுப்பார் என்று திட்டி விடுகிறார்.
உடனே நான் ஹோட்டலில் இருந்து சாப்பாடு வாங்கி கொடுத்து விடுகிறேன். அதை நீங்கள் சாப்பிட்டு மீனாவிடம் பேசிட்டு பொறுமையாக தான் போனும் என்று சொல்லி மச்சானை கூட்டிவிட்டு சாப்பாடு வாங்கி கொடுத்து விடுகிறார். பிறகு மீனாவிடம் மண்டபத்தின் அட்ரஸை வாங்கிக் கொண்டு செல்வத்தை கூப்பிட்டு மண்டபத்திற்கு போகிறார். அங்கே போனதும் மீனாவின் நிலைமை எடுத்துச் சொல்லி முத்து ஆர்டரை வாங்க பார்க்கிறார்.
ஆனால் அங்குள்ள மேனேஜர் ஏற்கனவே இந்த ஆர்டர் வேறு ஒருவருக்கு போய் விட்டதாக சொல்கிறார். அப்பொழுது முத்து, மீனாவுக்கு இந்த ஆர்டர் கிடைக்கக்கூடாது என்று நினைத்த நபர் தான் வேண்டுமென்று மீனாவிடம் இருந்து பணத்தை திருட சொல்லி இருக்கிறார். அங்கே மீனாவிடம் இருந்து பணத்தை திருடிய பிறகு உங்களிடம் ஆர்டர் கொடுத்துட்டு போயிருக்காங்க என்றால் நிச்சயம் அவங்க தான் இந்த வேலையை பார்த்து இருப்பாங்க.
அதனால் யார் அந்த நபர் என்று எனக்குத் தெரிய வேண்டும் என முத்து மேனேஜரிடம் கரராக கேட்கிறார். ஆரம்பத்தில் சொல்ல மறுத்த அந்த மேனேஜர் பிறகு சிந்தாமணியின் பெயரை சொல்லி விடுகிறார். அப்பொழுதே முத்துக்கு தெரிந்து விட்டது இதற்கு பின்னணியில் எல்லா வேலையும் பார்த்தது சிந்தாமணி தான் என்று. சிந்தாமணியுடன் விஜயாவும் முத்துவுடன் மாட்ட வேண்டும், அப்பொழுது தான் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கும்.
அடுத்ததாக மனோஜ்க்கு உடம்பு சரியில்லை என்று வீட்டில் இருந்து சாப்பாடு ரெடி பண்ணி ரோகினி ஷோரூம் கொண்டுட்டு போகிறார். ரோகிணியை பார்த்ததும் மனோஜ் நீ ஏன் இங்கே வந்தாய், அம்மா உன்னை இங்கே வரக்கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள். இப்பொழுது நீ வந்திருப்பது தெரிந்தால் அதற்கும் தேவையில்லாமல் திட்டுவாங்க நீ வீட்டுக்கு போ என்று சொல்கிறார்.
அதற்கு ரோகிணி என்னால் உன்னிடம் பேசாமல் இருக்க முடியாது, அதனால் தான் வந்தேன் என்று சொல்கிறார். உடனே மனோஜ் அப்படி என்றால் எங்க அம்மா மனசு மாற்ற வேண்டிய பொறுப்பு உன்னிடம் இருக்கிறது. எங்க அம்மா பழைய மாதிரி உன்னை ஏற்றுக் கொண்டால் எனக்கும் ஓகே தான் என்று கண்டிஷன் போட ஆரம்பித்து விட்டார். இதை கேட்ட ரோகிணி உனக்கு எதுனாலும் முன்னாடி வந்து நிற்பது நானாகத்தான் இருப்பேன், உங்க அம்மா வர மாட்டாங்க அதை யோசித்துகோ என்று சொல்லிவிட்டு போய்விடுகிறார்.