Serial Trp Rating List: சில தொலைக்காட்சி சேனல்கள் சீரியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் புதுசு புதுசாக சீரியல்களை கொண்டு மக்களை என்டர்டைன்மென்ட் பண்ணுகிறார்கள். அப்படி வந்த சீரியல்களில் எந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகளை பெற்றிருக்கிறது என்பதை ஒவ்வொரு வாரமும் பார்த்து வருகிறோம். அப்படி இந்த வாரம் எந்த சீரியல்கள் அதிக புள்ளிகளை பெற்றிருக்கிறது என்பதை பார்க்கலாம்.
சிங்க பெண்ணே: தொடர்ந்து சில மாதங்களாக சிங்கப் பெண்ணே சீரியல் தான் அதிக புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. இந்த வாரமும் 9.57 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை தக்க வைத்திருக்கிறது. ஆனந்தியின் கர்ப்பத்திற்கு அன்பு தான் காரணமாக இருப்பார் என்று நினைத்த தோழிகளுக்கு அன்பு ஒரு சொக்கத்தங்கம் கண்ணியவான் என்பதை ஆனந்தி நிரூபித்து விட்டார். தற்போது ஆனந்தி ஒரு அளவுக்கு யூகித்த ஆதாரத்தை தேடி ஹோட்டலுக்கு போகிறார். அங்கே இருக்கும் மித்ரா அந்த ஆதாரம் ஆனந்தி கையில் கிடைக்காத படி குளறுபடி பண்ணி விடுவார்.
மூன்று முடிச்சு: முக்கியமான கதையை கொண்டு வராமல் ஜவ்வு மாதிரி இழுத்து அடிக்கும் மூன்று முடிச்சு சீரியல் இந்த வாரம் 8.89 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது. நந்தினி மற்றும் சூர்யாவின் கெமிஸ்ட்ரி எதுவும் சரிப்பட்டு வராமல் கதையை வேறு விதமாக கொண்டு வருவதால் கொஞ்சம் டல் அடித்து வருகிறது. ஆனால் இப்பொழுது தான் சூர்யாவுக்கு வீட்டில் வேலை பார்க்கும் ரேணுகாவின் மீது சந்தேகம் வந்திருக்கிறது. அதனால் கூடிய விரைவில் ரேணுகாவை யார் அனுப்பி இருக்கிறார் என்ற விஷயத்தை கண்டுபிடித்து அர்ச்சனாவின் சுயரூபத்தை வெளிக்கொண்டு வருவார்.
கயல்: கயலுக்கு வேலை போயிருந்தாலும் சிவசங்கரியிடம் விட்ட சவாலின் படி எழிலை ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என்று நினைக்கும் கயல் டிராவல்ஸ் பிசினஸை கையில் எடுத்து பணத்திற்காக போராடி வருகிறார். இந்த சூழலில் பெரியவர் ஒருவர் தவறவிட்ட பணத்தை கயல் எப்படியாவது அவரை சந்தித்து கொடுக்க வேண்டும் என்று முயற்சி எடுத்து வருகிறார். இந்த வாரம் 8.53 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
மருமகள்: பிரபுவுக்கு தெரியாமல் ஆதிரை இரண்டு லட்ச ரூபாய் பணத்தை ஏற்பாடு பண்ணி எப்படியாவது பிரபுவின் தம்பி தங்கைக்கு கொடுக்க வேண்டும் என்று முயற்சி எடுக்கிறார். ஆனால் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பிரபுவுக்கு சந்தேகமான நிலையில் ஆதிரை பிரபுவை சமாளித்து விட்டார். இருந்தாலும் அந்த பணத்தை எப்படி பிரபுக்கு தெரியாம தம்பி தங்கைகளுக்கு கொடுப்பார் என்பது தான் ஆதிரையின் அடுத்த அதிரடியான செயல்களாக இருக்கப் போகிறது. இந்த வாரம் 7.87 புள்ளிகளை பெற்று மருமகள் சீரியல் நான்காவது இடத்தில் இருக்கிறது.
சிறகடிக்கும் ஆசை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எத்தனையோ சீரியல்களில் இந்த ஒரு சீரியல் தான் பல மாதங்களாக டிஆர்பி ரேட்டில் இடம் பிடித்து முதல் ஐந்து இடத்திற்குள் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இந்த வாரமும் சிறகடிக்கும் ஆசை சீரியல் 7.52 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.