எண்ணி 27 படங்கள் இதுவரை நடித்துள்ளார் மிர்ச்சி சிவா. ஆளவந்தான், விசில் போன்ற படங்களில் தலையைக் காட்டினாலும். வெளி உலகத்திற்கு சிவா தெரிய ஆரம்பித்தது என்னமோ சென்னை 600028 படத்தின் மூலம் தான். வெங்கட் பிரபுவின் உடன் பிறக்காத தம்பியாய் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
எந்த ஹீரோ நடிக்கிறார்களோ இல்லையோ, அவர்களுக்கு படம் ஓடுகிறதோ இல்லையோ,அதை பற்றி எல்லாம் கவலை இல்லை என்பது போல் மிர்ச்சி சிவாவின் நடிப்பில் நக்கல் நையாண்டியோடு படங்கள் வெளிவந்து கொண்டு தான் இருக்கும்.
சூப்பர் ஹிட் படங்களில் வரும் காட்சிகளை அப்படியே உல்டாவாக நடித்து அசத்துவதில் கைதேர்ந்த ஆக்டர் மிர்ச்சி சிவா. தமிழ் படம் தில்லுமுல்லு போன்ற படங்கள் இதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டு. இவருக்கு படம் ஓடுதோ இல்லையோ தனி ரசிகர் பட்டாலும் இருக்கிறது.
எந்த மேடையில் இவர் ஏறினாலும் அங்கே உள்ள ஆடியன்ஸை தன் பக்கம் இழுக்கும் நகைச்சுவை பேச்சு திறமை கொண்டவர்,. தற்சமயம் இவர் நடிப்பில் சுமோ என்ற படம் நாளை ரிலீஸ் ஆவதற்கு தயாராக உள்ளது. இந்த படத்தில் ஜப்பான் மல்யுத்த வீரர் ஒருவர் நடித்துள்ளார்.
அவரை வைத்து அடிக்கும் லூட்டியை தான் கதையாக எடுத்துள்ளார் இயக்குனர். இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரித்து உள்ளார். இந்த படம் ரிலீஸ் ஆன பின் என் ரேஞ்சே வேற என்று மார்தட்டி சொல்கிறார் மிர்ச்சி சிவா. இனி நடிக்கப் போகும் படங்களுக்கும் 2 கோடிகள் சம்பளமாக கேட்டு தயாரிப்பாளர்களை ஓட விடுகிறார்.