நயன்தாராவால் பெரும் நஷ்டத்தை சந்தித்த நிறுவனம்.. அடுத்தடுத்து விழும் மரண அடி

Nayanthara : நயன்தாரா சமீபத்தில் தன்னை யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். இது ஒருபுறம் இணையத்தில் ட்ரோலாக மாறியது. இதை அடுத்து நயன்தாராவால் இப்போது பெரும் நஷ்டத்தை பிரபல நிறுவனம் சந்தித்திருக்கிறது.

அதாவது சமீபகாலமாக நயன்தாரா நடிக்கும் படங்கள் பெரிய அளவில் போகவில்லை. இதனால் விநியோகஸ்தர்கள் நயன்தாராவின் படத்தை வாங்கவே பயப்படுகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் அவரது திருமண வீடியோவை நெட்பிளிக்ஸ் வெளியிட்டது.

ஆனால் இந்த திருமண வீடியோவில் தனுஷ் தயாரித்த நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல் ஒலிக்கப்பட்டதால் வழக்கு தொடுக்கப்பட்டது. இதற்கு தனுஷ் நஷ்ட ஈடு கேட்டிருந்தார். இதனால் நெட்பிளிக்ஸ்-க்கு நெருக்கடி ஏற்பட்டது.

நயன்தாராவால் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்த நிறுவனம்

இந்த பரபரப்பு ஓய்வதற்குள் மாதவன், சித்தார்த், நயன்தாரா நடிப்பில் உருவான டெஸ்ட் படத்தை 55 கோடி கொடுத்து நெட்பிளிக்ஸ் வாங்கியிருந்தது. இப்படம் அண்மையில் வெளியான நிலையில் 5 கோடி கூட கல்லா கட்டவில்லையாம்.

இதனால் கிட்டத்தட்ட 50 கோடிக்கு மேல் நஷ்டத்தை நெட்பிளிக்ஸ் அடைந்திருக்கிறது. இவ்வாறு நயன்தாராவால் தொடர்ந்து இந்நிறுவனம் நஷ்டத்தை சந்தித்து வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

அடுத்ததாக நயன்தாரா, சுந்தர் சி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் 2 படத்தில் நடித்து வருகிறார். சுந்தர் சி யின் படங்கள் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இந்த படம் நயன்தாராவுக்கு திருப்புமுனையாக அமைய அதிக வாய்ப்பு இருக்கிறது.