Serial : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடர் எதிர்பாராத திருப்பங்களுடன் நடந்து வருகிறது. அந்த வகையில் மீனாவின் பணத்தை திருடர்கள் பரிந்து சென்றுவிட்டார்கள். இதனால் மணமுடைந்து போயிருக்கிறார்.
இந்த நிலையில் சீதா தனது காதலன் அருணுக்கு போன் செய்து நடந்த விஷயத்தை கூறுகிறார். மேலும் பணத்தை எப்படியாவது சீக்கிரம் கொடுத்து விடுகிறோம் என்று சொல்கிறார். ஆனால் அருண் திருடுனவங்கள நான் கண்டுபிடிக்கிறேன் என்று கூறுகிறார்.
ஆனால் சீதா நீங்க போலீஸ் ட்ரைனிங் வேலையை பாருங்க, எங்க மாமா எல்லாம் பாத்துட்டு இருக்காங்க என்று கூறுகிறார். மற்றொருபுறம் பார்வதியை சந்தித்த முத்து அவரிடமிருந்து உண்மையை வாங்குகிறார். இதற்கெல்லாம் காரணம் சிந்தாமணி மற்றும் விஜயா தான் என்பது தெரிய வருகிறது.
முத்து போட்ட பிளானால் சிக்க போகும் சிந்தாமணி
இதனால் முத்து ஒரு பக்கா பிளான் போடுகிறார். அதாவது சிந்தாமணி மற்றும் விஜயா ஆகியோரை உங்கள் வீட்டில் ஒரு மூணு மணி நேரம் வைத்துக் கொள்ளுங்கள். அதுவும் வெளியே விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்கிறார்.
மேலும் வீட்டுக்கு வந்த முத்து, ஸ்ருதி மற்றும் ரவியை மாடிக்கு அழைத்துச் செல்கிறார். ஒரு பிளான் பண்ண போறோம் செல்வம் வந்த பிறகு எல்லாவற்றையும் சொல்கிறேன் என்று கூறுகிறார். அதாவது நாளைக்கு ஒரு வீட்டிற்கு சென்று இன்கம்டேக்ஸ் ஆபிஸராக போக வேண்டும் என்று கூறுகிறார்.
இதெல்லாம் க்ரைம் ஆகிவிடும் என்று ரவி சொல்கிறார். பணத்தைக் கண்டுபிடித்து இதில் யார் தவறு செய்தார்கள் என்று நிரூபிக்க வேண்டும் என்றால் இப்படித்தான் செய்ய வேண்டும் என முத்து பிளான் போட்டுள்ளார்.