மணிவிழாவிற்காக தந்திரவாதி குணசேகரன்பரமபதம் ஆட்டம் விளையாடி வருகிறார். ஒவ்வொரு அடியையும் பார்த்து வைக்கிறார். அவருக்கு யானை பலமாக அவரது தாயார் விசாலாட்சி அம்மையார் நிற்கிறார். இதனால் குணசேகரன் மணிவிழா நடத்தி முடிப்பேன் என்ற வைராக்கியத்தோடு இருக்கிறார்.
ஈஸ்வரியின் தந்தை சேதுராமனை, நல்லவர் போல் நடித்து தலையாட்டி பொம்மை போல் குணசேகரன் ஆட்டி வைக்கிறார். அவர் பேச்சுக்கு இணங்க இவரும் அவர் செய்ததை எல்லாம் மறந்துவிட்டு மகள் என்று கூட பாராமல் அவருக்கு மணிவிழா கொண்டாட வலியுறுத்தி வருகிறார்.
இது ஒரு புறம் இருக்க குடும்பத்தோடு தாய் மற்றும் நான்கு மகன்களும் கோயிலுக்கு சென்றுள்ளனர். அங்கே விசாலாட்சி பல தடாலடி முடிவுகளை எடுக்கிறார். இளைய மகன்களிடம் அண்ணன் தான் நமக்கு எல்லாம் அவன் பின்னால் நங்கூரமாய் நிற்க வேண்டும் என அனைத்து மகன்களுக்கும் அறிவுரை கூறுகிறார்.
அது மட்டும் இல்லாமல் இந்த மணிவிழாவை ஊரே மெச்சும் அளவிற்கு நடத்த வேண்டும். எல்லோருக்கும் அழைப்பு விடுங்கள் என ஒரு தந்திரம் செய்கிறார். நான்கு மருமகள்கள் உடைய குடும்பத்தினர் அனைவரையும் அழைத்து முறை செய்ய சொல்லுங்கள் இதுதான் நமக்கு கௌரவம் என்கிறார்.
நம் வீட்டுப் பெண்கள் வீட்டை விட்டு வெளியே போனதை எல்லோரும் மறக்கும்படி இந்த விழா அமைய வேண்டும். மருமகள்களால் நம்மை விட்டுப் போன கௌரவம் மீண்டும் நம் பக்கம் வரவேண்டும். அதற்கு அவர்கள் எல்லோரும் எந்தத் தடையும் சொல்லக்கூடாது. வந்தவர்கள் அனைவரின் மனது கோணாமல் நடந்து கொள்ள வேண்டும் என மகன்களை ஏற்றி விடுகிறார் விசாலாட்சி.