Vijay Tv : விஜய் டிவியில் பிரபல நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர். இது வெற்றிகரமாக பல சீசன்களை கடந்து இப்போது பத்தாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் வெள்ளித்திரையில் பல பாடகர்கள் உருவாகி இருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியை மாகாபாவுடன் இணைந்து பிரியங்கா தொகுத்து வழங்கி வந்தார். இந்நிலையில் விஜய் டிவியை ஜியோ வாங்கிவிட்டதாக தகவல் வெளியானது. மேலும் ஜியோ டிஸ்னி ஹாட் ஸ்டாரில் தான் விஜய் டிவி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்த சூழலில் பிரியங்கா விஜய் டிவியிலிருந்து விலக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல் இப்போது சூப்பர் சிங்கர் சீசன் 10 நிகழ்ச்சியை மாகாபாவுடன் இணைந்து லட்சுமி பிரியா தொகுத்து வழங்க இருக்கிறார்.
பிரியங்காவுக்கு பதிலாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகை
அதாவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியல் காவேரி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் லட்சுமி பிரியா. இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.
இவர் ஏற்கனவே விஜேவாக இருந்த நிலையில் இப்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இதைப் பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியாகி விட்டார்கள். இவர் நன்றாக தொகுத்து வழங்குவார் என்று நம்புகின்றனர்.
ஆனால் சமீபத்தில் பிரியங்காவுக்கு திருமணம் நடந்துள்ளதால் சில வாரங்கள் மட்டும் தான் லட்சுமி பிரியா தொகுத்து வழங்குவார் என்று கூறப்படுகிறது. ஆனால் இந்நிகழ்ச்சியை தொடர்ந்து லட்சுமி பிரியாவே தொகுத்து வழங்கலாம் என்பது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.