தங்கம் விலை போல சம்பளத்தை உயர்த்திய நயன்.. படம் ஓடலன்னாலும் அலும்பு குறையலையே

Nayanthara: நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் டெஸ்ட் படம் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியானது. நேரடி ஓடிடியில் வெளிவரும் போதே படத்தில் கன்டென்ட் இருக்காது என பேசப்பட்டது.

அதற்கேற்றார் போல் படம் சூர மொக்கையாக இருந்தது. ஒரு தடவை கூட படத்தை பார்க்க முடியல என ஆடியன்ஸ் சோசியல் மீடியாவில் விமர்சனம் செய்தனர்.

இந்நிலையில் நயன்தாரா புதிதாக நடிக்க போகும் படத்துக்கு எக்கச்சக்க சம்பளம் கேட்கிறாராம். ஏற்கனவே அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் இவர் முன்னிலையில் உள்ளார்.

படம் ஓடலன்னாலும் அலும்பு குறையலையே

10 முதல் 12 கோடி வரை சம்பளமாக வாங்கி வந்த இவர் தற்போது மூக்குத்தி அம்மன் 2, ராக்காயி, மண்ணாங்கட்டி என பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

அது போக சிரஞ்சீவி நடிக்கும் படத்தில் இவரை ஹீரோயின் ஆக கமிட் செய்ய தயாரிப்பாளர் நினைத்து இருக்கிறார். ஆனால் நயன் 18 கோடி சம்பளம் வேண்டும் என ஸ்ட்ரிக்ட் ஆக சொல்லிவிட்டாராம்.

இதனால் அதிர்ந்து போன தயாரிப்பாளர் வேறு ஹீரோயினை பார்க்கலாம் என நடையை கட்டி விட்டதாக தகவல்கள் கசிந்துள்ளது.

முன்பு போல் நயன்தாராவுக்கு மார்க்கெட் இல்லை. படங்களும் சரிவர போகாத சூழல் இருக்கிறது. போதாக்குறைக்கு சர்ச்சைகளும் ஏராளம்.

அப்படி இருக்கும்போது எந்த தைரியத்தில் இவர் இப்படி தங்கம் விலை போல சம்பளத்தை ஏற்றி இருக்கிறார் என கோடம்பாக்க வட்டாரத்தில் பரபரப்பாக பேசி வருகின்றனர்.