பிளவு ஏற்படுத்த குணசேகரன் எடுத்த கடைசி அஸ்திரம்.. இங்க பத்த வெச்சா, அங்க எரியும் சைக்கோ ஆடும் ஆட்டம்

ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி, ஜனனி நான்கு பேரும் உடன்பிறவா அக்கா தங்கைகளாக ஒற்றுமையோடு இருக்கிறார்கள். இதுதான் குணசேகரனுக்கு பெரிய இடையூறாக இருக்கிறது. இந்த ஒற்றுமையை முதலில் உடைக்க வேண்டும், அப்போதுதான் நாம் நினைத்ததை சாதிக்க முடியும் என கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறார் குணசேகரன்.

இந்த மணிவிழா மற்றவர்களுக்கு எல்லாம் பிரிவு விழாவாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்த சைக்கோ மன்னன் குணசேகரனின் திட்டம். ஓரளவு ஈஸ்வரியின் தந்தை சேதுராமனை வைத்து ஈஸ்வரியை வழிக்கு கொண்டு வந்து மணிவிழாவை 90% பிரச்சனை இல்லாமல் செய்து விட்டார்.

அடுத்த கட்டமாக தாயார் விசாலாட்சி அம்மையாரை வைத்து திட்டமொன்றை போட்டுள்ளார். அதாவது மருமகள்களின் வீட்டிலிருந்து வருபவர்கள் சீரும் சிறப்புமாக மொய் செய்ய வேண்டும் என கூறுகிறார். அப்போது தான் நம் குடும்பத்திற்கு கௌரவம் என மகன்களை தூண்டி விடுகிறார் விசாலாட்சி.

ஈஸ்வரியின் தந்தை சேதுராமன் மற்றும் ரேணுகா தாயார், நந்தினி அப்பா என எல்லாரும் ஓரளவு வசதியாக இருக்கிறார்கள். மொய் செய்ய அவர்கள் தங்களுக்கு உண்டான ஏற்பாட்டை செய்து விட்டனர். ஆனால் சக்தி தான் இதில் மாட்டிக் கொண்டுள்ளார். ஜனனியின் தந்தையுடன் அவ்வளவு நல்லுறவு இல்லை. இதனால் அவரை அழைப்பதற்கும், மொய்க்கும் சங்கடப்படுகிறார் சக்தி.

இதற்கிடையே சக்தி, குந்தவையை சந்தித்து அவரிடம் உதவி கேட்கிறார். இருவரும் துணி கடைக்கு செல்கிறார்கள். அங்கே வீட்டில் இருந்து துணி எடுக்க வந்திருக்கிறார்கள். சக்தி மற்றும் குந்தவை இருவரும் கடையிலேயே கையும் களவுமாக ஜனனியிடம் மாட்டி கொள்கிறார்கள். இதனால் உச்சகட்ட கோபத்தில் கொழுந்து விட்டு எரிகிறார் ஜனனி.