சீரியல் முடிந்த கையுடன் விஜய் டிவியில் மீண்டும் கிடைத்த வாய்ப்பு.. அவினாஷ் உடன் கமிட் ஆகிய நடிகை

Vijay Tv Serial: விஜய் டிவியில் அடுத்தடுத்து சில சீரியல்கள் முடிவடைந்த நிலையில் அதற்கு பதிலாக புதுசாக சீரியல்களை கொண்டு வந்து விட்டார்கள். அந்த வகையில் வீட்டுக்கு வீடு வாசப்படி மற்றும் சமீபத்தில் முடிந்த நீ நான் காதல் சீரியல்களிலுமே கதாபாத்திரங்களின் நடிப்பு மக்களை கவர்ந்திருந்தாலும் கதை கொஞ்சம் முன்னும் பின்னமாக இருந்ததால் எதிர்பார்த்தபடி வரவேற்பு கிடைக்கவில்லை.

அதனால் தற்போது இந்த இரண்டு நாடகத்திலும் நடித்த ஆர்ட்டிஸ்ட்களை இணைக்கும் விதமாக புத்தம் புது சீரியல் ஒன்று விஜய் டிவியில் வரப்போகிறது. அதாவது வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலில் கண்ணன் கேரக்டரில் நடித்த அவினாஷ் முதன்முறையாக விஜய் டிவியில் கதாநாயகனாக நடிப்பதற்கு கமிட் ஆகியிருக்கிறார்.

இவருக்கு ஜோடியாக நீ நான் காதல் சீரியலில் அபி கேரக்டரில் நடித்த வர்ஷினி நடிக்கப் போகிறார். இந்த சீரியல் ஸ்டார்மா சேனலில் வரும் மகுவா ஓ மகுவா என்ற சீரியலில் டப்பிங் தான் தமிழில் புதுசாக வரப்போகிறது. அந்த வகையில் அவினாஷ் மற்றும் வர்ஷினியின் நடிப்பு ஏற்கனவே மக்களை கவர்ந்ததால் தற்போது நடிக்கப் போகும் புது சீரியலுக்கும் மக்கள் பேராதரவு கொடுத்து விடுவார்கள்.

அவினாஷ் ஜீ தமிழ் மற்றும் சன் டிவி சீரியல்களில் நடித்திருந்தாலும் விஜய் டிவியில் கிடைத்த ஒரு சின்ன வாய்ப்பை பயன்படுத்தி அடுத்தடுத்து ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுக் கொண்டார்.