Serial: சின்னதிரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் தான் இல்லத்தரசிகளின் பொழுதுபோக்காக இருக்கிறது. அதனால் சில தொலைக்காட்சி நிறுவனங்கள் அதிகமான சீரியல்களை போட்டு டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடிப்பதற்காக போட்டி போட்டு வருகிறார்கள். இதில் ராஜவாக ஜொலிப்பது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் தான். அதனால் தான் காலம் காலமாக முதல் இடத்தை தக்க வைத்திருக்கிறது.
ஆனால் தற்போது ஏகப்பட்ட சேனல்கள் வந்து புதுசாக நாடகங்களை கொண்டு வருவதால் மக்கள் எல்லா சீரியல்களையும் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அதிலும் ப்ரைம் டைமங்கில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான் அதிக புள்ளிகளை பெற்று டிஆர்பி ரேட்டிங்கில் அடுத்தடுத்த இடத்தைப் பிடித்திருக்கிறது.
அந்த வகையில் 7.30 மணிக்கு போட்டி போட்டு நான்கு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதுவும் இந்த நான்கு சீரியல்களுமே ஹிட் சீரியல் என்று சொல்லக்கூடிய அளவிற்கு மக்களை கவர்ந்திருக்கிறது. இதில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலும், விஜய் டிவியில் மகாநதி சீரியல் இனி வரும் வாரங்களில் 7.30 மணிக்கு ஒளிபரப்பாக போகிறது.
மேலும் கலைஞர் டிவியில் மெட்டி ஒலி சீரியல் மற்றும் ஜீ தமிழில் கெட்டி மேளம் சீரியல் போன்ற இந்த நான்கு சீரியல்களுமே மக்களின் பேவரிட் சீரியலாக இடம் பிடித்திருக்கிறது. அதனால் 7.30மணிக்கு எந்த சீரியலுக்கு மக்கள் பேராதரவு கொடுப்பார்கள் என்பதை கணக்கிடும் விதமாக ஓட்டு கணக்கெடுப்பு வைக்கப்பட்டதில் சன் டிவியை ஓவர்டேக் பண்ணும் அளவிற்கு விஜய் டிவி தான் அதிக புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறது. அதாவது 90% ஓட்டு மகாநதி சீரியலுக்குத்தான் கிடைத்திருக்கிறது.