மே ஒன்றாம் தேதி சூர்யாவின் ரெட்ரோ படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் பாரிவேல் கண்ணன் என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சூர்யா. ஏற்கனவே இந்த படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா நடந்து முடிந்தது. இதன் ப்ரோமோஷன் வேலைகளில் சூர்யா பிஸியாக இறங்கியுள்ளார். ஆந்திரா, கர்நாடகா என எல்லா பக்கமும் சென்று ப்ரோமொட் பண்ணி வருகிறார்.
இதனிடையே அடுத்து அவர் வாத்தி, லக்கி பாஸ்கர் போன்ற படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு படம் பண்ண உள்ளார். ஆர்ஜே பாலாஜி படத்தை முடித்த பின்பு அவருடன் இணைய உள்ளார். இதை அதிகாரப்பூர்வமாக அங்கே அறிவித்து விட்டார் இயக்குனர்.
நீண்ட நாட்களாக வெற்றிமாறன் மற்றும் சூர்யா கூட்டணியில் உருவாக உள்ள வாடிவாசல் படம் கிடப்பில் கிடக்கிறது இந்த படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஷூட்டிங் ஆரம்பிக்க இருக்கிறது என பேச்சுக்கள் அடிபட்டது. ஆனால் சூர்யா, வெங்கி அட்லூரி படத்திற்கு சென்றுவிட்டால் இதன் கதி என்ன என்பதுதான் இப்பொழுது கேள்விக்குறி.
வெற்றிமாறனிடம், சூர்யா எதிர்பார்க்கும் ஒரே விஷயம் இந்த படத்தை விரைவில் முடிப்பது தான். ஆனால் விடுதலை மற்றும் அதன் இரண்டாம் பாகத்தை அவர் நீண்ட நாட்களாக எடுத்துக் கொண்டது சூர்யாவுக்கு சற்று பயத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனால் வெற்றிமாறனிடம் முழு கதையையும் கேட்கிறார் சூர்யா.
முழு ஸ்கிரிப்ட்டும் கிடைத்து விட்டால், படம் எப்பொழுது முடியும் என்பதையும் கணித்து விடலாம். அதனால் சூர்யா திட்டம் போட்டு காய் நகர்த்தி வருகிறார். அப்படி முழு படத்தையும் வெற்றிமாறன் ஸ்கிரிப்டாக கொடுத்து விட்டால் இந்த படம் ஆரம்பித்து விடுமாம்