பல கோடி முதலீட்டில் லைக்கா.. மீண்டும் எடுக்க போகும் விஸ்வரூபம்

Lyca Production: லைக்கா நிறுவனம் தமிழ் சினிமாவில் கால் ஊனி மிகக் குறுகிய காலத்திலேயே விஸ்வரூபம் எடுத்தது. ஆனால் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக தொடர் தோல்வியை கொடுத்து பெரும் நஷ்டத்தை சந்தித்தது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான லால் சலாம் படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை தழுவியது. அதன் பிறகு அஜித்தின் விடாமுயற்சி படத்தை நம்பி இருந்த நிலையில் அதுவும் காலை வாரிவிட்டது.

இப்போது விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தை லைக்கா தயாரிக்கிறது. இந்த படம் தான் லைக்கா நிறுவனத்தின் கடைசி படம் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் மீண்டும் லைக்கா விஸ்வரூபம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஐந்து மெகா பட்ஜெட் படங்களை தயாரிக்கும் லைக்கா

அதுவும் தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களாக இருக்கும் ரஜினி, கமல் மற்றும் சிம்பு ஆகியோரின் கால்ஷீட்டுக்காக காத்திருக்கிறது. கிட்டத்தட்ட 1500 கோடி பட்ஜெட்டில் 5 மெகா படங்களை எடுக்க உள்ளனராம்.

மேலும் இளம் இயக்குனர்கள் மற்றும் புது இயக்குனர்களை வைத்து படம் எடுக்கலாம் என்று திட்டம் தீட்டியுள்ளனர். அதற்கான ஆலோசனைகள் மற்றும் தேர்வுகளை தொடர்ந்து லைக்காக நிறுவனம் செய்து வந்து கொண்டிருக்கிறது.

ஆகையால் அஸ்தமனமாகும் நிலையில் இருந்த லைக்கா மீண்டும் உயிர் பெற்று ஒரு நல்ல நிலையான இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விரைவில் இந்த படங்களுக்கான அறிவிப்பை வெளியிட உள்ளது.