குணசேகரன் வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பு.. நெஞ்சில் வஞ்சகத்தோடு நுழைந்த உடனையே கக்கிய விஷம்

முதல் முதலாக குணசேகரன் வாயிலிருந்து நல்ல வார்த்தைகள் வந்தது. வந்த உடனே வீட்டுக்குள் பாம்பு புகுந்தது போல் கரிகாலனின் அம்மா ஜான்சி ராணி நுழைந்து விட்டார். குணசேகரன் முதன்முதலாக வீட்டுப் பெண்களுக்கு ஆதரவாக ஒரே ஒரு வார்த்தை பேசினார் அதுவும் பொறுக்கவில்லை.

தனது தாயார் விசாலாட்சி அம்மையாரிடம் ஜவுளி எடுப்பதற்காக கடைக்கு மருமகள்கள் அனைவரும் போனதை கேள்விப்பட்டு மிகவும் சந்தோஷப்பட்டார். நிம்மதியா எவ்வளவு வேண்டுமானாலும் தாராளமாக வாங்கி வரட்டும் அம்மா எனவும் கூறுகிறார். அவர்கள் வீட்டு வேலை செய்யாமல் வெளிவேலைக்கு சென்றால் தான் தப்பு என ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.

இப்படி வீட்டிற்க்காக வேலை செய்தால் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் அவர்கள் பக்கம் நிற்கலாம் எனவும் கூறினார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே வெளியே அண்ணன் என்ற ஒரு அபாய குரல் ஒலிக்கிறது. நான் வீட்டுக்குள் வந்தால் நன்றாக இருக்காது என வந்த உடனேயே எதிர்மறை பேச்சுக்களும் வருகிறது.

வாசலில் சாமியார் கோலத்தில் ஜான்சி ராணி நிற்கிறார். அவர்கள் இருவருக்கும் இவர் எப்படிப்பட்டவர் என்பது நன்கு தெரியும். வந்த உடனே காசி ராமேஸ்வரம் போய் வந்தேன் என திருநீரை அள்ளி குணசேகரனிடம் கொடுக்கிறார். இவரை பற்றி நன்கு அறிந்தவர் அவர். வந்த விஷயத்தை சொல்லு என்கிறார்.

எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறீர்கள் என கேள்விப்பட்டேன், ஜெயிலுக்கு போய் வந்திங்களாமே. போஸ்டர் பரமசிவன் உடன் சம்பந்தம் பேசி உள்ளீர்களாமே என எல்லாவற்றையும் கேட்கிறார் ஜான்சி. போஸ்டர் பரமசிவம் எனக்கு மேல கீழ்த்தனமான ஆள் என்றும் கூறுகிறார். இப்படி வந்த உடனேயே வாயில் உள்ள விஷத்தை எல்லாம் கக்குகிறார்.