தனுஷ் இட்லி கடை படத்தை முடித்தவுடன், போர் தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளார். ஆரம்பத்தில் இந்த படத்திற்காக 150 கோடிகள் பட்ஜெட் ஒதுக்கி உள்ளனர்.
சுமோ, ஜீனி, மூக்குத்தி அம்மன் 2 போன்ற படங்களை தயாரித்து வந்ததால் இப்பொழுது தனுஷ் படத்தை எவ்வளவு கம்மி பட்ஜெட்டில் எடுக்க முடியும் என்பதை கணக்கு போட்டு வருகிறார் ஐசரி கணேஷ். 100 முதல் 110 கோடிகளில் எடுக்கவும் சில திட்டங்களை வரையறுத்துள்ளார்.
இந்தப் படத்தை ஜூன் முதல் வாரத்தில் ஆரம்பிக்க இருக்கிறார்கள். இதற்கு முழுக்க முழுக்க செட் அமைத்து எடுக்கப் போகிறார்கள். நான்கு தெருக்களில் நடக்கும் கதை என்பதால் இதற்கு போடும் செட் மட்டும் தான் இதில் பெரும் பங்கு வகிக்குமாம். அதனால் அந்த வேலையில் மெனக்கெட்டு வருகின்றார்கள்.
ஆரம்பத்தில் ஆதித்யா ராம் ஃபிலிம் சிட்டியில் இதற்கு உண்டான செட் அமைப்பதற்கு ஏற்பாடு செய்தனர். அதற்கு ஒன்று முதல் ஒன்றரை கோடி செலவாகும் என்பதால் இதற்கு வேறு ஒரு திட்டம் போட்டு விட்டார் ஐசரி கணேஷ். இவருக்கு சொந்தமான 20 ஏக்கர் இடம் ஈவிபிக்கு எதிராக இருக்கிறது.
இதனால் இந்த இடத்தில் சுமார் 15 ஏக்கர்களுக்கு செட் அமைத்து வருகின்றனர். இனிமேல் எவ்வளவு நாள் சூட்டிங் வேண்டுமானாலும் நடக்கட்டும், அதைப் பற்றி கவலை இல்லை என தைரியமாக இருக்கிறார் ஐசரி கணேஷ். இதுவும் போக மற்ற படங்களுக்கு வாடகைக்கு விடும் ஐடியாவும் அவருக்கு இருக்கிறதாம். நான்கு தெருக்கல் ஒரு சேர அமைத்து செட் போட்டுள்ளனர்.