Vijay: கடந்த வாரம் விஜய் பூத் கமிட்டி கருத்தரங்கிற்காக கோவை சென்றார். அங்கு அவருக்கு மக்களும் தொண்டர்களும் ஆரவாரமான வரவேற்பை கொடுத்து திக்குமுக்காட வைத்தனர்.
அதில் ரசிகர்கள் செய்த சேட்டைகளையும் பார்த்தோம். இப்படி பல வீடியோக்கள் வைரலான நிலையில் சில எதிர்மறை விமர்சனங்களும் எழுந்தது.
அதேபோல் கோவைக்கு வந்த உதயநிதிக்கும் கட்சியினர் வரவேற்பு கொடுத்தனர். ஆனால் விஜய் அளவுக்கு இல்லை என்பதே அனைவரின் கருத்து.
இதையும் இரு கட்சிகளும் மாற்றி மாற்றி விமர்சித்து வருகின்றனர். இந்த சூழலில் வலைப்பேச்சு பிரபலம் பிஸ்மி இந்த விவகாரம் குறித்த தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
பளிச்சுன்னு சொன்ன பத்திரிக்கையாளர்
அதில் உதயநிதிக்கு வந்தது தானா சேர்ந்த கூட்டம் கிடையாது. காசு கொடுத்து வந்தவர்கள் தான் என்பது நன்றாகவே தெரிகிறது.
ஆனால் விஜய்க்கு வந்தது தானா சேர்ந்த கூட்டம் தான். அதில் தொண்டர்களும் ரசிகர்களும் ஒரு பக்கம் இருந்தாலும் விஜய்யை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் கூடிய மக்களும் உண்டு.
அதேபோல் அரசியலில் ஒரு மாற்றம் வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். அதுதான் இந்த கூட்டமாக வெளிப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
பொதுவாக அரசியல் கட்சி கூட்டங்கள் கூட்டுவதற்கு பணம், பிரியாணி என யோசிப்பார்கள். ஆனால் விஜய் அப்படி செய்யவில்லை என்றும் பிஸ்மி தெரிவித்துள்ளார்.
இப்படி விஜய் கொங்கு மண்டலத்திற்கு வந்து ஒரு கலக்கு கலக்கி விட்டார். அதை அடுத்து மதுரையில் அடுத்த பூத் கமிட்டி மாநாடு நடைபெற இருக்கிறது. அங்கு எந்த மாதிரியான சம்பவம் நடக்குமோ தெரியவில்லை.