Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், தான் கர்ப்பமானதை முதலில் விஜய்யிடம் தான் சொல்ல வேண்டும் என்று காவேரி ஆசைப்பட்டார். ஆனால் அதே நேரத்தில் வெண்ணிலா அங்கு இருந்து பிரச்சனை பண்ணுவதால் ஏகப்பட்ட சிக்கல்களை விஜய் சந்தித்து வருகிறார். அதனால் அதை எல்லாத்தையும் சரி பண்ண பிறகு நாம் சொல்லிக் கொள்ளலாம் என்று காவேரி அமைதியாகிவிட்டார்.
அத்துடன் ஒப்பந்தத்தின்படி கல்யாணம் பண்ணினவர்கள் தான் என்று நினைக்கும் தன்னுடைய குடும்பத்திற்கும் கர்ப்பம் என்று தெரிந்து விட்டால் அவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்பதை யூகிக்க முடியாத காவேரி குடும்பத்திலும் சொல்லாமல் மறைத்து விட்டார். இப்படி யாரிடமும் சொல்லாமல் இருக்கும் காவேரி, பிறந்த வீட்டில் உள்ள கஷ்டமான நிலையை மாற்ற தன்னுடைய சப்போர்ட் ஏதாவது இருக்க வேண்டும் என்று பொருட்காட்சியில் அப்பளம் வைப்பதற்கு முயற்சி எடுத்தார்.
அந்த சமயத்தில் காவிரி மயக்கம் போட்டு விழுந்த நிலையில் அங்கே வந்த விஜய் காவிரியை தூக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு போனார். அங்கே போனதும் மருத்துவர்கள் மூலம் காவேரி கர்ப்பம் என்ற விஷயத்தை தெரிந்து கொண்டார். உடனே விஜய் சந்தோஷத்தில் காவேரியிடம் பேசி தற்போது என்னுடைய சந்தோஷத்தை சொல்வதற்கு வார்த்தையே இல்லை.
எனக்கு இருக்கும் பிரச்சனையும் சிக்கல்களையும் தீர்த்து வைக்கும் பொக்கிஷமாக என்னுடைய குழந்தை எனக்கு வரப்ரசதமாக கிடைத்திருக்கிறது. உன்னையும் என்னுடைய குழந்தையும் நன்றாக பார்த்து நாம் மூன்று பேரும் சந்தோசமான வாழ்க்கை வாழலாம் என்று மனதில் பட்ட விஷயங்களை எல்லாம் ஓப்பனாக காவேரி இடம் கொட்டித் தீர்க்கிறார்.
ஆனாலும் எதற்கு என்னிடம் சொல்லாமல் மறைத்தாய் என்று கேட்ட பொழுது, வெண்ணிலா பற்றி முடிவு எடுக்கும் சூழ்நிலையில் நீங்கள் இருப்பதால் இது ஒரு காரணமாக இருந்து விடக்கூடாது என்பதனால் தான் நான் குழந்தை பற்றி விஷயத்தை சொல்லவில்லை என்று சொல்கிறார். அதற்கு விஜய், வெண்ணிலா என்னுடைய எக்ஸ், ஆனால் நீ அப்படி இல்லை, காவேரி நீ தான் என்னுடைய உலகமே அதை ஏன் புரிந்து கொள்ள மாட்டுகிறாய் என்று கேட்கிறார்.
அடுத்ததாக காவிரியை வீட்டுக்கு போகலாம் என்று விஜய் கூப்பிடுகிறார், ஆனால் வெண்ணிலா பிரச்சனை சரியாகட்டும். அப்பொழுதுதான் என்னுடைய குடும்பத்தில் இருப்பவர்கள் முழு மனதுடன் என்னை உங்க வீட்டுக்கு அனுப்பி வைப்பார்கள். அப்படி அனுப்பி வைத்தால் தான் எனக்கும் சந்தோஷம் என்று சொல்லி விடுகிறார். உடனே விஜய், அப்படி என்றால் வெண்ணிலா பிரச்சினையை நான் முடிவுக்கு கொண்டு வருகிறேன்.
ஆனால் அதுவரை நீ என்னை நம்ப வேண்டும் நான் என்ன பண்ணாலும் எனக்கு நீ சப்போர்ட்டாக நிற்க வேண்டும் என்று காவிரியிடம் சொல்கிறார். காவிரியும் எல்லாத்துக்கும் சம்மதம் என்று சொல்லிய நிலையில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது நான் கர்ப்பம் என்ற விஷயம் நவீனுக்கு தெரியும் என காவேரி கூறுகிறார். இதைக் கேட்டதும் விஜய் முகம் வாடிய நிலையில் காவிரி, விஜய் இடம் பேசி சமாளித்து விடுகிறார்.
அடுத்ததாக இருவரும் ஹாஸ்பிடல் இருந்து கிளம்பியதும் காவிரி எனக்கு பொருட்காட்சியில் வேலை இருக்கிறது என்று சொல்கிறார். அதற்கு விஜய், அதெல்லாம் இருக்கட்டும் தற்போது நாம் இரண்டு பேரும் கொஞ்சம் தனியாக இருக்க வேண்டும். நம்முடைய பார்ம் ஹவுஸ்க்கு போகலாம் என்று காவிரியை கூட்டிட்டு போகிறார். அப்படி இரண்டு பேரும் தனியாக இருக்கும் பொழுது காவிரி கர்ப்பம் என்பதால் காவேரியை பொக்கிஷமாக பார்த்துக் கொள்கிறார். இதற்காகவாவது விஜய் சீக்கிரம் வெண்ணிலாவின் பிரச்சினையை முடித்து விடுவார்.