சேரனை புரிஞ்சுக்காமல் கோபப்படும் பாண்டியன்.. நிலாவை கூட்டிட்டு போகும் பல்லவன்

Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், மனம் ஒத்தும் தம்பதிகளாக நிலா சோழன் கல்யாணம் நடக்கவில்லை என்ற விஷயம் சேரனுக்கு மட்டும் தான் தெரியும். அதனால் நடேசன், வெளியே அண்ணன் தம்பிகளுடன் தூங்கிக் கொண்டிருக்கும் சோழனை எழுப்பி நீ என் இங்கே தினமும் தூங்குகிறாய்.

உன் பொண்டாட்டியும் நீயும் தனியா தூங்கினால் நல்லவா இருக்கும், நீ போய் உள்ளே தூங்கு என்று திட்டி சோழனை நிலாவின் ரூம்குள் அனுப்பி வைக்கிறார். உடனே சோழன் அப்பா செய்த உருப்படியான விஷயம் இதுதான் என்று நிலாவின் ரூமுக்குள் தூங்கப் போய் விடுகிறார்.

பிறகு நடேசன் வெளியே போனதும் சேரன், நிலாவின் ரூம் கதவை தட்டி சோழனை உள்ளே தூங்க விடாமல் வெளியேவே தூங்க வைத்து விடுகிறார். இதனை பார்த்த பாண்டியனுக்கு எதுவுமே புரியவில்லை. உடனே மறுநாள் சேர்னிடம் உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையவில்லை என்பதற்காக சோழன், மனைவியுடன் சந்தோஷமாக இருப்பது உனக்கு பிடிக்கவில்லையா?

அவர்கள் இருவரையும் தனித்தனியாக தூங்கச் சொல்வது எப்படி சரியாக இருக்கும், உனக்கு பொறாமை வந்துவிட்டது என்று வாய்க்கு வந்தபடி சேரனை புரிந்து கொள்ளாமல் நோகடித்து பேசி விடுகிறார். இதனால் சேரன் உண்மை சொல்ல முடியாமல் கண் கலங்கி போய் நிற்கிறார்.

அடுத்ததாக பல்லவன் காலேஜில் ஒரு பொண்ணை காதலிப்பதை தெரிந்து கொண்ட நிலா அந்த பொண்ணை பார்ப்பதற்கு பல்லவன் கூட காலேஜுக்கு போகிறார். பிறகு அந்த பெண்ணை பார்த்ததும் அந்த பெண்ணுக்கும் பல்லவன் மீது ஒரு ஆசை இருக்கிறது என்று நிலா புரிந்து கொண்டார்.

அடுத்ததாக பேசிக் கொண்டிருக்கும் போதே பாண்டியன் என்ன பண்ணுகிறான் என்று நிலா கேட்கும் பொழுது, பல்லவன் நான் உங்களை நேரடியாகவே கூட்டிட்டு போய் காட்டுகிறேன் என நிலவை கூட்டிட்டு போகிறார். அந்த வகையில் பாண்டியனும் ஏதோ ஒரு பெரிய வேலையில் இருப்பதாக நிலாவிடம் சோழன் பொய் சொல்லி இருக்கிறார்.

தற்போது அதுவும் பொய் என்று நிலவுக்குத் தெரியும் வகையில் பாண்டியன் மெக்கானிக்கல் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற உண்மை நிலாவுக்கு தெரிந்து விடும். இப்படி அடுத்தடுத்து பொய் சொல்லி நம்மளை முட்டாள் ஆக்கி இருக்கிறார் என்ற கோபத்தில் நிலா, சோழனிடம் சண்டை போடப் போகிறார்.