ஹீரோயிசம் காட்டாத சசிகுமார்.. அயோத்தியில் இருந்து டிராக்கை மாற்றிய ஃபேமிலி மேன்

சசிகுமார் இயக்குனராக அறிமுகமாகி இப்பொழுது முழு நேர நடிகராக மாறிவிட்டார். இயக்குனர், நடிகர், புரொடியூசர் என பல அவதாரங்கள் வைத்திருக்கிறார். சுப்பிரமணியபுரம், சுந்தரபாண்டியன், போராளி,கிடாரி போன்ற ஏழு படங்களை இதுவரை இவர் தயாரித்தும் உள்ளார். இவரது ஃபேமிலி மேன் படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது.

சசிகுமாரின் ஃபேமிலி மேன் படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது. சமீபத்தில் இவர் மூன்று படங்கள் நடித்துள்ளார், மூன்றுமே வழக்கத்திற்கு மாறாக கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக அமைந்துள்ளது. அயோத்தி, கருடன், நந்தன் என வெவ்வேறு கதை அம்சம் கொண்ட படமாக தேர்ந்தெடுத்துள்ளார்.

அயோத்தி படம் கொடுத்த வெற்றிக்கு பின்னர் இப்படி தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சசிகுமார். நாளை ரிலீஸ் ஆக உள்ள பேமிலி மேன் படம் இன்று பத்திரிக்கையாளர்களுக்காக பிரத்தியேக காட்சி ஒளிபரப்பப்பட்டுள்ளது. படம் நன்றாக இருக்கிறது என்று படத்தை பார்த்தவர்கள் தங்களுடைய கருத்தை வெளியிட்டு வருகிறார்கள்.

இலங்கையில் ஏற்படும் பொருளாதார பிரச்சனை காரணமாக விலைவாசி உயர்கிறது. இதனை சமாளிக்க முடியாமலும், பாதுகாப்பு கருதியும் இலங்கையை விட்டு குடும்பத்தோடு ராமேஸ்வரம் வந்து இறங்குகிறார் சசிகுமார். அவர் இங்கு சந்திக்கும் பிரச்சனை தான் கதை. இவர்களுடன் ரமேஷ் திலக் பக்ஸ் போன்றவர்கள் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்

ஈழத்தமிழர்களாக தமிழ்நாட்டுக்கு வந்து, இங்கே அவர்கள் பண்ணும் அட்ராசிட்டி தான் படம். முழுக்க முழுக்க காமெடியாக கொடுத்துள்ளார் புதுமுக இயக்குனர் அபிஷன் ஜிவினித். நாளை ரிலீசாக உள்ள இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது பிரீடம் , நானா, எவிடன்ஸ், பகைவனுக்கும் அருள்வாக்கு என நான்கு படங்கள் கையில் வைத்திருக்கிறார்.