ஜெயிலர் 2 பிரபலங்கள்: ட்ரெண்டிங் வில்லன் மாஸ் என்ட்ரி!

Rajini : நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதை அடுத்து இப்போது நெல்சன் ஜெயிலர் 2 படத்தை எடுத்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பும் நடந்து வருகிறது.

இந்த சூழலில் ஜெயிலர் 2 படத்தில் இடம்பெறும் முக்கிய நடிகர்கள் பற்றி தகவல் வெளியாகி இருக்கிறது. ரஜினி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் நிலையில் அவரது மனைவியாக இந்த பாகத்திலும் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார்.

அதேபோல் முதல் பாகத்தில் இடம் பெற்ற சிவராஜ்குமார் மற்றும் மோகன்லால் ஆகியோரும் ஜெயிலர் 2-வில் நடிக்கின்றனர். மேலும் இந்த முறை பாலையா சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் பாலையா பத்மபூஷன் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயிலர் 2வில் இடம்பெறும் பிரபலங்கள்

அடுத்ததாக தற்போது வெளியாகும் பெரும்பான்மையான படங்களில் எஸ்ஜே சூர்யா வில்லனாக நடித்து வருகிறார். இப்போது ஜெயிலர் 2 -விலும் ட்ரெண்டிங்கில் இருக்கும் எஸ்ஜே சூர்யா வில்லனாக நடிக்க இருக்கிறார்.

இதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவில் மிரட்டி வருகிறார் பகத் பாசில். மாமன்னன் படத்தில் ரத்னவேலாக மாஸ் காட்டிய பகத் நிறைய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அதில் ஜெயிலர் 2-வும் முக்கிய இடம் பெறுகிறது.

இவ்வாறு பல மொழிகளில் உள்ள நட்சத்திர பிரபலங்கள் இந்த படத்தில் இணைகின்றனர். ஆகையால் ஜெயிலர் முதல் பாகத்தின் வசூலை இந்த பாகம் நிச்சயம் முந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.