Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், குமரவேலுமிடமிருந்து அரசியை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் மீனா, பக்கத்தில் இருந்த தோசை கல்லை எடுத்து குமரவேலு தலையில் அடித்து விடுகிறார். இதனால் மயக்கமான குமரவேலுவின் நிலைமையை பார்த்து ராஜி, குமரவேலு இறந்து விட்டதாக முடிவு பண்ணி அங்கே இருப்பவர்களிடம் சொல்லிவிடுகிறார்.
உடனே மீனா பயந்து போய் அழ ஆரம்பித்து விடுகிறார், கோமதியும் புலம்பி அரசி வாழ்க்கையை பற்றி கவலையில் தவிக்கிறார். அத்துடன் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட செந்தில் மற்றும் கதிர் கோமதி தங்கிருக்கும் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதன் பிறகு தான் தெரியுது குமரவேலு சாகவில்லை உயிர் இருக்கிறதே என்று உடனே ராஜி, செந்தில் மற்றும் கதிருக்கு போன் பண்ணி சொல்லி விடுகிறார்.
அப்பொழுது அனைவரும் நிம்மதியான பெரும் மூச்சை விட்டார்கள். பிறகு செந்தில் மற்றும் கதிர் வந்ததும் எல்லாத்துக்கும் ஆறுதல் சொல்லிவிட்டு மயக்கத்தில் இருக்கும் குமரவேலு முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்புகிறார்கள். மயக்கமான குமரவேலு எழுந்து உட்கார்ந்த நிலையில் கதிர், அவனுடைய சட்டையை பிடித்து எதற்காக இங்கே வந்து இப்படி டார்ச்சர் பண்ணுகிறாய் என்று திட்ட ஆரம்பிக்கிறார்.
உடனே குமரவேலு சொல்லுகிறேன் என்று சொல்ல வரும் பொழுது அங்க இருந்த கதிர் மற்றும் செந்திலை தள்ளிவிட்டு வெளியே ஓடி விடுகிறார். குமரவேலுவை பிடிப்பதற்கு செந்தில் மற்றும் கதிர் பின்னாடியே துரத்தி போன நிலையில் இவர்கள் கண்ணில் மண்ணை தூவும் விதமாக குமரவேலு அங்கு இருந்து எஸ்கேப் ஆகிவிட்டார்.
பிறகு வீட்டிற்கு வந்த செந்தில் மீனாவுக்கு ஆறுதல் சொல்கிறார். அடுத்ததாக இந்த பிரச்சனை எப்படியோ முடிவுக்கு வந்துவிட்டது என்று சொல்வதற்கு ஏற்ப குமரவேலு எஸ்கேப் ஆகி மீனா வயிற்றில் பாலை வார்த்து விட்டார். அடுத்ததாக ராஜி இறுதி நடன போட்டியில் கலந்து கொள்ளும் பொழுது கதிரும் அதை பார்க்கப் போகிறார்.
அந்த வகையில் ராஜி ஆசைப்பட்ட மாதிரி இரண்டாவது பரிசை பெற்று கதிருக்கு பைக்கை கிப்டாக கொடுக்கப் போகிறார். இவர்களுடைய புரிதலும் அன்பையும் பார்த்து கோமதியும் மீனாவும் இந்த ஜோடியை சேர்த்து வைத்ததற்கு சந்தோஷம்தான் என்று பெருமைப்பட போகிறார்கள்.