ஓவராக ஆடிய சுதாகருக்கு செக் வைத்த பாக்கியா.. வாயடைத்துப் போன ஈஸ்வரி கோபி

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், சுதாகர் பிளான் பண்ண படி பாக்கியாவின் முதல் ரெஸ்டாரன்டையும் கைப்பற்றி விட்டார். அந்த வகையில் சுதாகருக்கு விலை போன கடையின் ஓனர் பாக்யாவை ஹோட்டலில் இருந்து வெளியே அனுப்பி விட்டார். இதனால் அட்வான்ஸ் பணத்தை மட்டும் வாங்கிவிட்டு செல்வியை கூட்டிட்டு பாக்கியா புலம்பிக்கொண்டே வருகிறார்.

அப்பொழுது செல்விக்கும் வேறு வேலை வேண்டும் என்பதால் புதுசாக இன்னொரு வேலையில் சேர்ந்து விட்டார். அத்துடன் பாக்கியா செல்வி பேங்குக்கு போய் ஹோட்டலுக்கு வாங்கிய லோனில் இன்னும் எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்று விசாரிக்கிறார்கள். அந்த வகையில் மொத்தமாக 41 லட்சம் ரூபாய் பேங்குக்கு இன்னும் செலுத்த வேண்டும்.

ஏனென்றால் லோன் போட்டு தான் இரண்டாவது ஹோட்டலை பாக்கியா வாங்கினார். பிறகு இந்த பணத்தை எப்படியாவது ஏற்பாடு பண்ணி திருப்பி அடைக்க வேண்டும் என்ற யோசனையில் பாக்யா வீட்டிற்கு வருகிறார். அப்படி வந்த பொழுது அங்கே கோபி ஈஸ்வரி செழியன் மற்றும் சுதாகர் அனைவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்க்கிறார்.

அத்துடன் சுதாகர் எதுவுமே நடக்காத மாதிரியும், பாக்யாவின் ஹோட்டலை வாங்கவில்லை என்ற அர்த்தத்திலும் பாக்கியவுடன் பேசுகிறார். அப்படி பாக்யா மற்றும் சுதாகரும் பேசிய நிலையில் சின்ன கருத்து வேறுபாடு வர ஆரம்பித்துவிட்டது.

உடனே கோபி ஈஸ்வரி முன்னாடி நல்லவன் போல காட்ட வேண்டும் என்பதற்காக சுதாகர், பாக்யாவிடம் நம்மளுக்கு இருக்கும் மனக்கசப்பை போக்க வேண்டும் என்றால் நீங்கள் கொடுத்த ஹோட்டலுக்கு நான் பணத்தை திருப்பிக் கொடுக்கிறேன் என்று சொல்கிறார்.

அதாவது எப்படியும் பாக்கியா அந்த பணத்தை வாங்க மாட்டார் என்ற நோக்கத்தில் சுதாகர் சொன்னார். ஆனால் பாக்கியா புத்திசாலித்தனமாக சுதாகர் சொன்னதும் நீங்கள் சொல்வதும் சரிதான் இரண்டு குடும்பமும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் என்னிடமிருந்து வாங்கிய ஹோட்டலுக்கு பணம் கொடுத்தால்தான் அதற்கு சரியாக இருக்கும்.

அதனால் நஷ்டமே ஏற்படாத வகையில் எனக்கு பணத்தை கொடுத்து செட்டில் பண்ணி விடுங்க என்று பாக்கிய சுதாகரிடம் கேட்டு சுதாகருக்கு செக் வைத்து விட்டார். இதை எதிர்பார்க்காத சுதாகர், என்ன சொல்வது என்று தெரியாமல் நாளைக்கு ஆபீஸ்ல வந்து வாங்கிட்டு போங்க என சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.

சுதாகர் போனதும் கோபி மற்றும் ஈஸ்வரி, பாக்யாவிடம் சுதாகரிடம் ஏன் பணம் கேட்டாய் என்று சண்டை போடுகிறார்கள். உடனே செழியனும் நீ பண்ணியது பேசியது எல்லாமே தவறு என்பது போல் பாக்கியவிடம் சொல்கிறார்.

உடனே பாக்யா, சரி நீங்க சொல்றபடி நான் சுதாகரிடம் பணம் வாங்கவில்லை. ஆனால் அதற்கு பதிலாக நான் பேங்கில் வாங்கின லோன் மொத்தம் 41 லட்ச ரூபா. அதை எப்படி கட்டணும் என்ன பண்ண போறீங்க மட்டும் எனக்கு சொல்லுங்க அது போதும் என பாக்யா கேட்டதும் ஈஸ்வரி கோபி மற்றும் செழியன் அனைவரும் வாயடைத்து போய்விட்டார்கள்.