Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், காவேரி கர்ப்பம் என்ற விஷயம் விஜய்க்கு தெரிந்தவுடன் இந்த உலகத்திலேயே நான் மட்டும் தான் சந்தோசமாக இருக்கிறேன் என்று பீல் பண்ணும் அளவிற்கு மொத்த சந்தோஷத்தையும் காவேரி மீது கொட்டுகிறார். அந்த வகையில் இன்றைக்கு ஒரு நாளைக்கு என்னுடன் நீ ஃபார்ம் ஹவுஸ்க்கு வரவேண்டும் என்று கூப்பிடுகிறார்.
உடனே காவிரியும் சரி என்று சொல்லிய நிலையில் விஜய்யுடன் வீட்டிற்கு போகிறார். அங்கே போனதும் காவிரியை தன்னுடைய உள்ளங்கையில் வைத்து பொக்கிஷமாக பாதுகாக்கும் அளவிற்கு விஜய் தாங்குகிறார். இந்த ஒரு தருணமே எனக்கு போதும் என்பதற்கு ஏற்ப காவிரியும் நெகிழ்ச்சியாக இருக்கிறார்.
அந்த சமயத்தில் சாரதா போன் பண்ணி பொருட்காட்சிக்கு அப்பளம் கேட்டு இரண்டு பேரும் வந்திருக்கிறார்கள். நானும் கூட வந்து உதவி பண்ணுகிறேன் என்று சொல்கிறார். ஆனால் காவிரி விஜய்யுடன் இருப்பதால் சாரதாவிடம் மாட்டிக் கொள்வோம் என்பதால் காவேரி வேண்டாம் என்று சொல்கிறார்.
உடனே விஜய், காவிரியிடம் இருந்து போனை வாங்கி காவேரி போல் சாரதா விடம் பேசி சமாளித்து பொருட்காட்சிக்கு வராதபடி தடுத்து விடுகிறார். இதற்கிடையில் விஜய் மீது எந்த தவறும் இல்லை, வெண்ணிலாவும் நானும் இங்கு இருப்பது சரியில்லை என்று முடிவுக்கு வந்த வெண்ணிலவின் மாமா, பசுபதி மற்றும் ராகினிடம் நான் இங்கிருந்து வெண்ணிலாவே கூட்டிட்டு கிளம்பி விடுகிறேன் என்று சொல்கிறார்.
ஆனால் இவர் போய்விட்டால் விஜயும் காவிரியும் பிரிக்க முடியாது என்ற பயத்தில் ராகினி மற்றும் பசுபதி, வெண்ணிலாவின் மாமா மனதை குழப்பம் படி காவேரி பற்றி தவறாக சொல்லி விஜய் மனதில் வெண்ணிலா தான் இருக்கிறார் என்று வாய்க்கு வந்தபடி பொய் சொல்லி சூழ்ச்சி பண்ண ஆரம்பித்து விட்டார்கள்.
அந்த சூழ்ச்சியில் சிக்கிய வெண்ணிலாவின் மாமா, பசுபதி ராகினி சொல்வதை கேட்டுக்கொண்டு வெண்ணிலாவை கூட்டிட்டு போகாமல் இருக்கப் போகிறார். அத்துடன் எப்படியாவது சதி பண்ணி வெண்ணிலா கழுத்தில் விஜயை தாலி கட்டு வைக்க வேண்டும் என்று பிளான் பண்ணி கோவிலுக்கு விஜய் வர சொல்லி டிராமா பண்ண போகிறார்கள்.
ஆனால் இந்த டிராமா தான் வெண்ணிலாவிற்கு கடைசி ட்ராமாவாக இருக்கப்போகிறது என்பதற்கு ஏற்ப விஜய், வெண்ணிலாவிற்கும் வேறு ஒருவருக்கும் கல்யாணத்தை நடத்தி வைத்து வெண்ணிலா காவிரி வாழ்க்கையில் குறுக்கிடாதபடி ஒரு சம்பவத்தை செய்யப் போகிறார்.