Serial: மக்கள் மத்தியில் சீரியல்கள் ராஜாவாக ஜொலித்து வருவதால் சில தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டு சீரியல்களை கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் சன் டிவி விஜய் டிவிக்கு அடுத்தபடியாக இருப்பது ஜீ தமிழ் சேனல் தான். ஆனால் இப்பொழுது விஜய் டிவியை ஓவர் டேக் பண்ணும் அளவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகளை பெற்று வருகிறது.
அதற்கு காரணம் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சேனல்கள் அனைத்துமே சூப்பர் என்று விமர்சனங்கள் வாங்கி விறுவிறுப்பான கதைகளை கொண்டு வருகிறது. இதில் தற்போது டாப் 5 இடத்தை பிடித்த சீரியல்களை பற்றி பார்க்கலாம்.
கார்த்திகை தீபம்: சிவனாண்டி செய்த சதியால் ரோகிணி பாதிப்படைந்து உயிருக்கு போராடும் நிலையில் ஹாஸ்பிடலில் இருக்கிறார். ரோகிணியை காப்பாற்ற வேண்டும் என்றால் உடனடியாக ரத்தம் தேவைப்படுகிறது. அதனால் கார்த்திக், பரமேஸ்வரியை கூட்டிட்டு வருகிறார். ஆனால் சாமுண்டீஸ்வரி, பரமேஸ்வரி ரத்தம் கொடுத்து தான் என் மகள் பிழைக்க வேண்டும் என்று அவசியமில்லை என கோபத்தை காட்டுகிறார். இதனால் கார்த்திக், பரமேஸ்வரியை கண்டுபிடிக்காத அளவிற்கு ரத்தம் கொடுப்பதற்கு ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு வருகிறார். அதனால் எப்படியும் ரோகினையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பரமேஸ்வரி ரத்தம் கொடுத்து விடுவார்.
சந்தியா ராகம்: தனம் போட்டியில் வெற்றி பெற்ற உடன் ரகுராம் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்ட பொழுது எனக்கு கதிர் ரொம்ப பிடித்திருக்கிறது. கதிருடன் சேர்ந்து வாழனும் அதற்கு உங்களுடைய சம்மதம் வேண்டும் என கேட்கிறார். இதை எதிர்பார்க்காத ரகுராம், கதிரை ஏற்பதற்கு மறுத்து விடுகிறார். உடனே தனம் நான் கதிருடன் சேர்ந்து வெளியே போகிறேன் என்று சொல்லி தனியாக வாழ தொடங்கி விட்டார். இதன் பிறகு ரகுராமுக்கு எல்லா உண்மைகளும் கொஞ்சம் கொஞ்சமாக தெரியவந்து மாயவையும் கதிரையும் ஏற்றுக் கொள்வார்.
கெட்டி மேளம்: துளசியை கல்யாணம் பண்ண வேண்டும் என்று வெற்றி ஆசைப்பட்டாலும் அவருடைய காதலை வெளிப்படுத்தாமல் வீட்டில் பார்த்த பெண்ணுடன் கல்யாணம் பண்ணுவதற்கு சம்மதம் கொடுத்து விட்டார். அதே மாதிரி துளசியும் அப்பா அம்மா சந்தோஷத்திற்காக வேறு ஒரு உடன் நிச்சயதார்த்தம் பண்ணுவதற்கு தயாராகி விட்டார். ஆனாலும் சந்தர்ப்ப சூழ்நிலையால் துளசி கழுத்தில் வெற்றி தாலி கட்டி விடுவார்.
மனசெல்லாம்: வானதிக்கு உதவி பண்ண வேண்டும் என்பதற்காக கரிகாலன் சிக்கலில் மாட்டிக் கொண்டார். வானதி ஆசப்பட்ட மாதிரி அருளை கல்யாணம் பண்ணிக் கொண்டார். ஆனால் நந்தினி, கரிகாலனிடம் இந்த கல்யாணம் வேண்டாம் என்று சொல்லி என்னை காப்பாற்று என கெஞ்சினார். அதே நேரத்தில் நந்தினி அம்மா, கரிகாலனிடம் மகளை கல்யாணம் பண்ண சொல்லி காலில் விழுந்ததால் கரிகாலன் நந்தினி கழுத்தில் தாலி கட்டி விடுகிறார். இதற்கெல்லாம் நடுவில் தற்போது எந்த தப்பும் பண்ணாத கரிகாலன் மாட்டிக் கொண்டு முழிக்கிறார்.
வீரா: கார்த்திக்கின் மனைவியாக பிருந்தா வந்தாலும் பிருந்தாவை காலி பண்ண வேண்டும் என்று விஜி விபரீதமாக ஒரு முடிவை எடுத்து விட்டார். அந்த வகையில் பிரிந்தவை யாருக்கும் தெரியாமல் மொட்டை மாடியில் இருக்கும் தண்ணீர் தொட்டிக்குள் போட்டு விடுகிறார். எப்படியும் மாறன், பிருந்தா இருக்கும் இடத்தை கண்டுபிடித்து பிருந்தாவை காப்பாற்றி விடுவார். ஆனால் அதே நேரத்தில் விஜயின் உண்மையான முகத்திரை என்னவென்று மாறன் மற்றும் வீரா கண்டுபிடித்து அந்த வீட்டை விட்டு வெளியே அனுப்பி வள்ளிக்கு உண்மையை புரிய வைக்க வேண்டும்.