Suriya : கார்த்திக் சுப்புராஜ் ஜிகர்தண்டா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், பேட்ட என ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். சமீபத்தில் அவரது இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி இருந்தது ரெட்ரோ படம். இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதை அடுத்து பல ஊடகங்களில் கார்த்திக் சுப்புராஜ் பேட்டி கொடுத்து வரும் நிலையில் அடுத்ததாக சூர்யாவுடன் படம் பண்ண வாய்ப்பு இருப்பதாக கூறியிருக்கிறார். அதாவது ரெட்ரோவுக்கு பிறகு மீண்டும் சூர்யாவுடன் ஒரு படத்தின் இணைய உள்ளாராம்.
மேலும் அந்த படத்தை எடுக்க உற்சாகமாக உள்ளதாக கூறியிருக்கிறார். ஆனால் இதன் ஸ்கிரிப்ட் மற்றும் காலம் இரண்டுமே மிகப்பெரிய தான். இதனால் அதிக நாட்கள் தேவைப்படுகிறது. ஆனால் இப்போது சூர்யா வேறுபடங்களில் கமிட்டாகி இருக்கிறார்.
சூர்யாவின் அடுத்த பட அப்டேட் கொடுத்த கார்த்திக் சுப்புராஜ்
ஆகையால் இந்த படம் எப்போது தொடங்குவது என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் சூர்யாவுடன் இந்த படத்தில் இணைவேன் என்று கார்த்திக் சுப்புராஜ் கூறியிருக்கிறார். அதோடு சுவாரசியம் என்னவென்றால் இது அவரின் கனவு ஸ்கிரிப்ட்.
ஆகையால் எதிர்பார்ப்புக்கு மீறி இந்த படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கங்குவா படம் சூர்யாவுக்கு மிகப்பெரிய அடி கொடுத்த நிலையில் அவருக்கு ஒரு கம்பேக்காக ரெட்ரோ படத்தை கொடுத்திருக்கிறார்.
எனவே மீண்டும் இந்த கூட்டணி இணைவது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த படம் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பிலும் இருக்கின்றனர்.