ரெட்ரோவை காலி செய்த டூரிஸ்ட் ஃபேமிலி.. என் புருஷன் உங்களுக்கு கேவலமா போயிட்டாரா, வைரல் மீம்ஸ்

Memes: கங்குவா படத்திற்கு பிறகு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரெட்ரோ எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை கவரவில்லை. விமர்சன ரீதியாக பல நெகட்டிவ் கருத்துக்கள் கிளம்பியது.

இப்படத்துக்கு போட்டியாக வெளிவந்த டூரிஸ்ட் ஃபேமிலி தற்போது ஆடியன்ஸை கவர்ந்துள்ளது. திரை பிரபலங்களும் படத்தை பார்த்துவிட்டு ஆகா ஓகோ என பாராட்டி வருகின்றனர்.

இதில் ரெட்ரோவை கலாய்க்கவும் நெட்டிசன்கள் தவறவில்லை. அதில் வடிவேலுவின் காமெடி மீம்ஸ் எடுத்து சூர்யா சசிகுமாரை பார்த்து எனக்குன்னே வருவீங்களா என கேட்பது போன்ற மீம்ஸ் ட்ரெண்டிங்கில் உள்ளது.

அதேபோல் பிரியமான தோழி படத்தில் ஜோதிகா என் புருஷன் உங்களுக்கு அவ்வளவு கேவலமா போயிட்டாரா என ஆக்ரோஷத்தோடு கேட்பார்.

மாதவன் இருக்கும் இடத்தில் சூர்யா போட்டோவை வைத்தும் நெட்டிசன்கள் கலாய்கின்றனர். அதேபோல் ரெட்ரோ லாபத்தில் 10 கோடியை சூர்யா அகரம் அறகட்டளைக்கு கொடுத்துள்ளார்.

உங்க காசை எடுத்து நீங்களே நன்கொடை குடுப்பீங்களா என இதையும் மீம்ஸ் போட்டு கிண்டல் அடித்து வருகின்றனர். அதன் தொகுப்பு இதோ.