பெரிய படங்களை காலி பண்ணிய சின்ன படங்கள்.. சூர்யா, கார்த்திக்கு விழுந்த அடி

Karthi : பெரிய பட்ஜெட் படங்கள் பயங்கரமாக புரமோஷன் செய்து வெளியாகின்றனர். ஆனால் ரிலீஸ் சமயத்தில் சின்ன படங்களுடன் வெளியாகி பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகிறது. சூர்யா மற்றும் கார்த்தி படங்கள் நஷ்டத்தை சந்தித்திருக்கிறது.

அந்த வகையில் அரவிந்த்சாமி, கார்த்தி நடிப்பில் மெய்யழகன் படம் வெளியானது. எதார்த்தமான படமாக இப்படம் உருவான நிலையில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் இந்த படத்திற்கு போட்டியாக லப்பர் பந்து படம் வெளியானது.

ஹரிஷ் கல்யாண் மற்றும் தினேஷ் ஆகியோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் நல்ல லாபத்தை கொடுத்தது. இதனால் மெய்யழகன் படத்தின் வசூல் பாதித்தது.

சூர்யா மற்றும் கார்த்தி படங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனை

அதேபோல் சமீபத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் ரெட்ரோ படம் வெளியாகி இருந்தது. ஆனால் இதே நாளில் சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி படம் வெளியாகி இருந்தது.

இந்த படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பை கொடுத்து வருகிறார்கள். இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு அகதிகளாக வரும் குடும்பம் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறது என்பதை காமெடியாக சொல்லி உள்ளது.

இதனால் ரெட்ரோ படத்தின் வசூல் குறைந்துள்ளது. இவ்வாறு பெரிய பட்ஜெட் படங்களுடன் வெளியான சின்ன படங்கள் வசூலை வாரிக் குவித்து வருகிறது. மேலும் கார்த்தி, சூர்யா இருவரின் படங்களும் சின்ன படங்களால் நஷ்டத்தை சந்தித்திருக்கிறது.