Memes: சோசியல் மீடியாவில் ஒவ்வொரு நாளும் புதுப்புது பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டு வருகிறது. அதில் பிரபலங்கள் பற்றிய சர்ச்சை செய்திகள் தான் அதிகமாக இருக்கும்.

யார் வீட்டில் என்ன நடக்கிறது என மீடியாக்களுக்கு தான் முதலில் தெரியும். சம்பந்தப்பட்டவர்களே அப்படியா என ஆச்சரியமாக கேட்கும் அளவுக்கு மீடியாக்கள் படு ஃபாஸ்டாக இருக்கிறது.

அப்படித்தான் கடந்த சில நாட்களாக நியூஸ் சேனல்கள் இந்தியா பாகிஸ்தான் போர் பற்றி பரபரப்பு செய்தியை ஒளிபரப்பாக்கி வந்தது. அதில் ஓவர் பில்டப் கொடுத்து வந்த செய்திகளும் ஏராளம்.

தற்போது அது முடிவுக்கு வந்த நிலையில் வாண்ட்டாக வந்து சிக்கி இருக்கிறார் ரவி மோகன். ஐஷரி கணேஷ் மகள் திருமணத்திற்கு இவர் பாடகி கெனிஷாவுடன் வந்திருந்தார்.

ஏற்கனவே அவருடைய விவாகரத்திற்கு இதுதான் காரணம் என்று சொல்லப்பட்டது. அவர் அதை மறுத்த நிலையில் இப்படி ஜோடியாக அதுவும் ஒரே கலர் காஸ்டியூம் போட்டு வந்தது அனைவரின் கண்களையும் உறுத்தியுள்ளது.

மீடியாக்கள் இதை பார்த்துவிட்டு சும்மா இருப்பார்களா என்ன தற்போது இவர்கள் பற்றிய செய்திகளும் விவாதங்களும் தான் அதிகமாக இருக்கிறது.
அதை நெட்டிசன்கள் வழக்கம் போல மீம்ஸ் போட்டு வருகின்றனர். பாகிஸ்தான் போர விட பெரிய ஆக்கப் போரா இருக்கும் போல இருக்கே.
என்ன ஜெயம் ரவி நல்லா இருக்கீங்களா பார்டர்ல இருந்து நேரா உங்க வீட்டுக்கு தான் வரோம் என பல மீம்ஸ் வைரல் ஆகி வருகிறது. அதன் தொகுப்பு இதோ.