கூலிக்காக 7 படங்களை நிராகரித்த நடிகர்.. லோகேஷ் கொடுத்த நம்பிக்கை

Lokesh Kanagaraj : லோகேஷ் படத்தில் நடித்தால் தொடர்ந்து அவர்களுக்கு மற்ற படங்களில் அதிக வாய்ப்பு கிடைத்து வருகிறது. அதோடு லோகேஷ் எல்சியுவில் படங்களை எடுத்து வருவதால் அடுத்தடுத்த படங்களிலும் அவர்கள் தொடர்ந்து நடித்து வருகிறார்கள்.

இப்போது ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார். இதில் எக்கச்சக்க பிரபலங்கள் நடித்து வருகின்றனர். குறிப்பாக மத்த மொழியில் மிகவும் பிரபலமடைந்த நபர்களையும் கூலி படத்தில் இணைத்திருக்கிறார் லோகேஷ்.

காரணம் இந்த படம் பான் இந்தியா படமாக உருவாக்குவதால் வரவேற்பு நிறைய கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் கூலி படத்திற்காக ஏழு படங்களின் வாய்ப்பை நிராகரித்திருக்கிறார் சௌபின் சாகீர்.

கூலி படத்திற்காக ஏழு படங்களை நிராகரித்த நடிகர்

கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் மூலம் புகழ் பெற்றவர் தான் இவர். மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்த இவர் தமிழில் ரஜினியின் கூலி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கூலி படத்தில் கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் சௌபின் கால்சீட் கொடுத்துள்ளாராம். இந்த படத்தை மட்டும் தற்போதைக்கு கவனம் செலுத்துங்கள் என்று லோகேஷ் கேட்டுக்கொண்டாராம். இதனால் மற்ற பட வாய்ப்புகளை நிராகரித்திருக்கிறார்.

லோகேஷ் கொடுத்த நம்பிக்கையால் கண்டிப்பாக கூலி படம் அவருக்கு ஒரு முக்கிய மைல்களாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூலி படத்தை பற்றிய நிறைய அப்டேட்டுகளை லோகேஷ் பேட்டிகளில் கொடுத்து வருகிறார்.