Sun tv and Vijay Tv: விஜய் டிவி என்றாலே ரியாலிட்டி ஷோ மூலம் மக்களை சிரிக்க வைப்பது தான். அதனால் தான் காலம் காலமாக பல நிகழ்ச்சிகளை கொடுத்து மக்கள் மனதில் இடம் பிடித்து வருகிறது. இதில் முக்கியமானது பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி.
மனதில் இருக்கும் பாரமே குறைந்துவிட்டது என்று சொல்வதற்கு ஏற்ப குக் வித் கோமாளி நிகழ்ச்சி காமெடியுடன் சேர்ந்து கலாட்டா பண்ணும் அளவிற்கு போட்டியாளர்களும் கோமாளிகளும் சேர்ந்து அட்டகாசம் செய்து ஹிட் கொடுத்து விடுவார்கள். ஆனால் இதெல்லாம் வெங்கட் பட் மற்றும் தாமு இருக்கும் வரை மட்டுமே சாத்தியமாக இருந்தது.
வெங்கட் பட் எப்பொழுது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு விலகினாரோ அப்பொழுதே மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்த நிகழ்ச்சியை பார்ப்பதை குறைத்து விட்டார்கள். ஆனாலும் மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் இந்த சீசனில் செப் கௌஷிக் வைத்து சீசன் 6 நிகழ்ச்சியை ஆரம்பித்து இருக்கிறார்கள்.
அந்த வகையில் கடந்த வாரம் முதல் எபிசோடு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் பிரியா ராமன் பெஸ்டாக சமைத்ததற்கு பரிசுகளை பெற்றார். டேஞ்சரஸ் ரவுண்டில் பிக் பாஸ் ராஜூ நின்றார். அத்துடன் கோமாளிகளை புதுசாக கொண்டு வந்து மக்களை என்டர்டைன்மென்ட் பண்ணுவதில் கவனம் செலுத்தி விஜய் டிவி ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செய்து வருகிறார்கள்.
ஆனால் இதற்குப் போட்டியாக இன்னும் ஒரு சில வாரங்களில் டாப்பு குக் டூப்பு குக் நிகழ்ச்சி ஆரம்பமாக போவதாக செஃப் வெங்கட் பட் சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருக்கிறார். என்னதான் விஜய் டிவி இந்த நிகழ்ச்சிக்கு குருவாக இருந்தாலும் வெங்கட் பட்டுக்கு இருக்கும் ரசிகர்கள் சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் டாப்பு குக் டூப்பு குக் நிகழ்ச்சியை தான் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு எதிராக இன்னும் கூடிய விரைவில் டாப்பு குக் டூப்பு குக் சீசன் 2 ஆரம்பமாக போகிறது. ஏற்கனவே சீரியலில் கொடி கட்டி பறக்கும் சன் டிவி, இந்த நிகழ்ச்சியிலும் டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகளைப் பெற்று விடும்.