அமேசான் பிரைம் விட்ட அறிக்கை.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

Amazon Prime : திரையரங்குகளில் படங்களை பார்ப்பதை காட்டிலும் ஓடிடியில் இப்போது ரசிகர்கள் அதிகமாக படங்களை பார்த்து வருகிறார்கள். இதனால் வாரத்திற்கு எப்படியும் தமிழில் மட்டுமே நாளை இந்த படங்கள் ஓடிடியில் வெளியாகி விடுகிறது.

குறிப்பாக அமேசான் பிரைம் வீடியோ மற்றும் நெட்பிளிகஸ் ஆகிய தளங்களில் தான் அதிகமாக படங்கள் வெளியாகிறது. இந்த சூழலில் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தரமான அறிக்கையை அமேசான் வெளியிட்டு இருக்கிறது.

அதாவது வருகின்ற ஜூன் 17ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைம் வீடியோவில் படங்கள் வெப் சீரிஸ் போன்றவை ஓடிக் கொண்டிருக்கும்போது இடையில் விளம்பரங்கள் வரும் என்று அறிவித்திருக்கின்றனர்.

வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அமேசான் பிரைம்

அதாவது தியேட்டரில் உள்ள அனுபவத்தை ஓடிடி கொடுத்து வந்தது. விளம்பரங்கள் இல்லாமல் தொடர்ச்சியாக ஒரு படத்தை பார்க்கும் போது சுவாரஸ்யம் அதிகமாக இருந்தது. ஆனால் இப்போது யூடியூப் போல படம் பார்க்கும்போது அடிக்கடி விளம்பரங்கள் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

மேலும் (Ad free) விளம்பரங்கள் இல்லாமல் படத்தை பார்ப்பதற்காக கூடுதலாக கட்டணம் செலுத்தலாம் என்றும் அமேசான் அறிவித்துள்ளது. இது வருடத்திற்கு 699 ரூபாய் அல்லது ஒரு மாதத்திற்கு 129 ரூபாய் செலுத்தலாம் என்று அறிவித்துள்ளது.

மேலும் இது ஜூன் 17 முதல் அமுலுக்கு வர உள்ளதால் ஓடிடி ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதனால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் வேறு ஓடிடியை சப்ஸ்கிரைப் செய்யலாம் என்ற அளவுக்கு யோசித்து வருகிறார்கள்.