Santhanam: சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் வருகின்ற மே 16ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கான ப்ரமோஷன் வேளையில் இறங்கியுள்ள சந்தானம் பல ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.
சமீபகாலமாக பேய் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சந்தானம், சுந்தர் சி, லாரன்ஸ் ஆகியோரின் படங்கள் வெற்றி வாகை தான் சூடி இருக்கிறது. லாரன்ஸ் முனி, காஞ்சனா என அடுத்தடுத்த பாகங்களில் நடித்து வெற்றி கண்டுள்ளார்.
அதேபோல் அரண்மனை படத்தின் அடுத்தடுத்த பாகங்களை சுந்தர் சி இயக்கி இருக்கிறார். இதில் அரண்மனை 4 படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சந்தானமும் தில்லுக்கு துட்டு என்ற பேய் படத்தில் நடித்திருந்தார்.
பேய் படங்களை பற்றி சந்தானம் கலக்கல் பேச்சு
அவ்வாறு சந்தானம் தான் நடித்த பேய் படத்தை பற்றி கலக்கலாக பேசியிருக்கிறார். அதாவது ராகவா லாரன்ஸ், சுந்தர் சி மற்றும் சந்தானம் ஆகியோரில் பேய் படங்கள் அதிக பார்ட் யார் எடுப்பார்கள் என்ற கேள்விக்கு பதில் கூறி உள்ளார்.
பேய் படங்களை நாங்க மூன்று பேருமே பிரித்துக் கொண்டோம். அதாவது காஞ்சனா போன்ற பேய்களுக்கு ஏதாவது உதவி தேவைப்படும் கதை என்றால் அதை லாரன்ஸ் எடுத்துக் கொள்வார்.
அதேபோல் எமோஷனலான பேய் என்றால் அதை சுந்தர் சி எடுப்பார். அப்படி உருவான படங்கள் தான் அரண்மனை. அதேபோல் தில்லுக்கு துட்டு படத்தை போல் காமெடியான பேய் கதை என்றால் நான் நடிப்பேன் என்ற சந்தானம் வேடிக்கையாக பேசி இருக்கிறார்.