சிறப்பு கட்டுரைகள்

கோர்ட் சீனில் பட்டையை கிளப்பிய 6 படங்கள்.. விறுவிறுப்பான கதைக்களம் பிடிச்சவங்க கண்டிப்பா பாருங்க

By Arun · 15 மே 2025 · Updated 07 மார்ச் 2026
court movies

Suriya: மர்மமான கொலை, அந்த கொலை யார் செய்தது என துப்புத் துலக்கி கண்டுபிடிக்கும் திரில்லர் படங்களை ரசிப்பதற்கே சினிமா ரசிகர்கள் கூட்டம் உண்டு.

அதிலும் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மாறி மாறி வாதாடி குற்றவாளியை கண்டுபிடிக்கும் காட்சிகள் எல்லாம் ஒருவித பரபரப்பை ஏற்படுத்தி விடும்.

அப்படிப்பட்ட சினிமாவை பார்த்து ரசிப்பவர்கள் கண்டிப்பாக இந்த ஆறு படத்தையும் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டும்.

கோர்ட் சீனில் பட்டையை கிளப்பிய 6 படங்கள்

மௌனம் சம்மதம்: தமிழ் சினிமாவில் வெளியான முதல் லீகல் திரில்லர் படம் மௌனம் சம்மதம். ஒரு கொலை நடந்தது என்றால் அதை போலீஸ் மற்றும் சிபிஐ அதிகாரிகள் கண்டுபிடிப்பது போல் படம் பார்த்து வந்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மாற்றான கதையை கொடுத்த படம்.

தம்பி மனைவியை கொலை செய்ததாக கைது செய்யப்படும் ஜெயசங்கர் நிரபராதி என நிரூபிக்க வழக்கறிஞர் மம்மூட்டி துப்பு துலக்குவது தான் இந்த படத்தில் கதை.

IMDB ரேட்டிங்: 7.1/10

மனிதன்: உதயநிதியின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படம் மனிதன். சாலையோரம் படுத்திருப்பவர்களின் மீது பணக்கார பையன் ஒருவன் கார் ஏற்றி கொலை செய்து விடுவான்.

பண பலத்தை பயன்படுத்தி அவனை காப்பாற்றியும் விடுவார்கள். வழக்கறிஞர் தொழிலே பிடிக்காத உதயநிதி ஒரு சில காரணத்தால் இந்த வழக்கை மீண்டும் கையில் எடுத்து அதில் ஜெயிப்பது தான் இந்த படத்தின் கதை.

IMDB ரேட்டிங்: 6.9/10

ஜெய்பீம்: சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. நீதி தவறிய போலீசுக்கும், நீதியை நிலைநாட்ட துடிக்கும் வழக்கறிஞருக்கும் இடையே நடக்கும் போராட்டம் தான் இந்த படம்.

முதலில் கணவனை காணவில்லை என்று தேடி வரும் பெண்ணுக்கு உதவி செய்யும் வழக்கறிஞராக சூர்யா அந்த கேஸை கையில் எடுப்பார். அதன் பின்னர் அவிழும் பல மர்ம முடிச்சுகள் திக் திக் நிமிடங்களாக இருக்கும்.

IMDB ரேட்டிங்: 8.6/10

நேர் கொண்ட பார்வை: அமிதாப் பச்சன் நடித்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் தான் நேர்கொண்ட பார்வை.

வன்கொடுமை செய்யப்பட்ட பெண்களுக்காக வாதாடி குற்றவாளியை கண்டுபிடிக்கும் கேரக்டரில் அஜித் நடித்திருப்பார். இந்த படத்தின் நீதிமன்ற காட்சிகள் ரசிக்கும் படி அமைந்திருக்கும்.

IMDB ரேட்டிங்: 7.7/10

பாசப்பறவைகள்: பாச பறவைகள் திரைப்படம் இந்த லிஸ்டில் வித்தியாசமான கதைகளத்தை கொண்டது. தன்னுடைய கணவனை தன் உடன் பிறந்த சகோதரன் தான் கொன்று விட்டார் என அவருக்கு தண்டனை வழங்க ராதிகா வாதாடுவார்.

இன்னொரு பக்கம் தன்னுடைய கணவன் நிரபராதி என லட்சுமி வாதாடுவார். பல கோர்ட் காட்சிகளுக்குப் பிறகு என்ன நடந்தது என்பதை சிவக்குமார் சொல்வது தான் இந்த படத்தின் கதை. இந்த படத்தின் நீதிமன்ற காட்சிகள் பார்ப்பதற்கு மெய்சிலிர்த்து விடும்.

IMDB ரேட்டிங்: 6.2/10

பிரியங்கா: ஜெயராம் மற்றும் ரேவதி நடிப்பில் வெளியான படம் பிரியங்கா. தன்னுடைய வீட்டில் வேலை செய்யும் பணி பெண்ணுக்கு நடந்த வன்கொடுமைக்கு எதிராக ரேவதி வழக்கு தொடுப்பார்.

பின்னர் தன்னுடைய கணவன் மற்றும் கணவன் குடும்பத்தால் அவர் சந்திக்கும் பல பிரச்சனைகள், நீதிமன்ற காட்சிகள் என படம் விறுவிறுப்பாக இருக்கும்.

IMDB ரேட்டிங்: 5.8/10

எல்லாம் அவன் செயல்: நடிகர் ஆர் கே வித்யாசமான வக்கீலாக மிரட்டிய படம் தான் எல்லாம் அவன் செயல். ஒரு வழக்கில் சிக்கும் குற்றவாளியை நிரபராதி என நிரூபித்து விடுதலை செய்து பின்னர் கொலை செய்யும் கேரக்டர்.

இந்த படத்தில் இவர் மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சிந்தாமணி என்ற பெண்ணின் மரணத்திற்கு காரணமானவர்களை நுணுக்கமாக கண்டுபிடிப்பது சுவாரசியமாக இருக்கும்.

IMDB ரேட்டிங்: 6.9/10