Soori : சூரியின் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான படம் தான் மாமன். கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தைப் போல உணர்ச்சி பொங்க இந்த படத்தை எழுதி இருந்தார் சூரி. பிரசாத் பாக்யராஜ் இயக்கிய இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்திருந்தார்.
மேலும் பாபா பாஸ்கர், சுவாசிகா, ராஜ்கிரண் மற்றும் பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த சூழலில் சூரி படத்திற்கு போட்டியாக சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல் படமும் வெளியாகி இருந்தது. இந்த படம் ஓரளவு கலமையான விமர்சனங்களை தான் பெற்று வந்தது.
ஆனாலும் முதல் நாளில் 2.85 கோடி வசூலை ஈட்டி இருக்கிறது. மேலும் சூரியின் மாமன் படம் முதல் நாளில் 1.12 கோடி வசூலை பெற்றுள்ளது. மாமன் படத்திற்கு இப்போது வரவேற்பு அதிகமாக இருப்பதால் குடும்பமாக படத்தை பார்க்க தியேட்டருக்கு செல்கிறார்கள்.
சூரியின் மாமன் படத்தில் முதல் நாள் கலெக்ஷன்
மேலும் சூரிக்கு இது சிறந்த ஓப்பனிங் ஆக அமைந்து உள்ளது. அதோடு தொடர்ந்து இப்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் படத்தின் வசூல் அதிகமாக வாய்ப்பு இருக்கிறது.
சூரி விடுதலை தொடங்கி கதாநாயகனாக அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். அந்த லிஸ்டில் இப்போது மாமன் படமும் இணைந்து இருக்கிறது. குடும்ப சென்டிமென்ட் ஆக எடுக்கப்பட்டுள்ளதால் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
அடித்தட்டில் இருந்து வந்து இப்போது சினிமாவில் ஒரு விஸ்வரூபத்தை அடைந்துள்ளார் சூரி. காமெடியில் மட்டுமல்ல சென்டிமென்டிலும் சிறந்த நடிகர் என்பதை மாமன் படத்தின் மூலம் நிரூபித்துள்ளார்.