மே இறுதி வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்.. ரெட்ரோவுக்கு டஃப் கொடுக்கும் ஹீரோ

OTT Release Movies : மே மாதம் எக்கச்சக்க படங்கள் வெளியானாலும் இறுதி வாரத்தில் பெரிதும் எதிர்பார்க்கும் சில படங்கள் போட்டிகளில் வெளியாகிறது. மே ஒன்றாம் தேதி சூர்யாவின் ரெட்ரோ மற்றும் சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி படங்கள் வெளியானது.

டூரிஸ்ட் ஃபேமிலி படம் தியேட்டரில் நல்ல வரவேற்பு பெற்று வருவதால் ஓடிடி ரிலீஸ் தள்ளிப் போய் உள்ளது. ஆனால் சூர்யாவின் ரெட்ரோ படம் வருகின்ற 31ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதற்குப் போட்டியாக நானி நடிப்பில் வெளியான ஹிட் 3 படமும் மே 29ஆம் தேதி நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

மலையாளத்தில் உருவான ஜெரி படம் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் குட் பாய் என்ற கொரியன் சீரிஸ், நெட்பிள்க்சில் விண்டோஸ் கேம் ஆகியவை வெளியாகிறது.

மே இறுதி வாரத்தில் ஓடிடியில் வெளியாகும் படங்கள்

மே 27 ஆம் தேதி அமேசான் வீடியோவில் fighter flight, Juliet and Romeo, the king of Kings,The prosecutor ஆகியவை ஸ்ட்ரீமிங் ஆகிறது. கன்னடத்தில் உருவான Agnyathavasi படம் ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

பீகாக் என்ற ஓடிடி தளத்தில் Dog Man, ஜியோ ஹாட் ஸ்டாரில் mountain head, A complete unknown ஆகிய படங்கள் வெளியாகிறது. இவ்வாறு மே இறுதியில் எக்கச்சக்க படங்கள் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட இருக்கிறது.

ஆனால் தியேட்டரில் தான் டூரிஸ்ட் ஃபேமிலி படம் ரெட்ரோ சிக்கலாக அமைந்தது. இப்போது ஓடிடியிலும் ஹிட் 3 படம் வெளியாகவதால் ரெட்ரோவை ரசிகர்கள் எந்த அளவுக்கு கொண்டாடுவார்கள் என்பது சந்தேகம்தான்.