எதிர்நீச்சல் 2 சீரியல் மூலம் தனக்கு தானே சூனியம் வைத்த ஜீவானந்தம்.. சன் டிவி சீரியலுக்கு விழுத்த அடி

Ethirneechal 2 Serial: சீரியலின் ராஜாவாக மக்கள் மனதில் ஜொலிக்கும் சன் டிவி சேனல் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் கம்மியான புள்ளிகளைப் பெற்று வருகிறது. இதற்கு காரணம் சில சீரியல்கள் கதை எதுவும் ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு சொதப்பலாக அமைந்து வருகிறது. அந்த வகையில் கயல் மற்றும் எதிர்நீச்சல் 2 இடம் பெற்றிருக்கிறது.

கயல் சீரியலாவது ஆயிரம் எபிசோடுக்கு மேல் போனதால் எப்படி கதையை அடுத்தடுத்து கொண்டு போக வேண்டும் என்று தெரியாமல் திணறிக் கொண்டு வருகிறது. ஆனால் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மனதில் சிம்மாசனத்தில் இருந்தது. இதனால் பட்டி தொட்டி எல்லாம் இந்த சீரியலை பற்றி பேசும் அளவிற்கு கதையும் ஆர்டிஸ்ட்களின் நடிப்பும் பேசப்பட்டது.

அதனால் தான் இரண்டாவது பாகத்தை அதிரடியாக ஜீவானந்தம் என்கிற திருச்செல்வம் கொண்டு வந்தார். ஆரம்பத்தில் கதை சூப்பர் என்று மக்கள் பாராட்டி எதிர்பார்ப்புடன் பார்த்து வந்தார்கள். ஆனால் தற்போது வர வர மாமியாரு கழுதை போல ஆனாளாம் என்பதற்கு ஏற்ப கதை சுத்தமாக நல்லா இல்லை.

வழக்கம்போல் குணசேகரின் ஆன் ஆதிக்கமும், பெண்கள் அடுப்பாங்கரையில் இருந்து புரணி பேசவும் தான் லாய்க்கு என்பதற்கு ஏற்ப தான் இந்த சீரியலின் கதை நகர்ந்து கொண்டு வருகிறது. அது மட்டுமில்லாமல் அண்ணனுக்கு சொம்பு தூக்கிகளாக இருக்கும் தம்பிகளும், சூடு சொரணை இல்லாமல் அந்த வீட்டில் வாழும் மருமகளின் வெட்டி பேச்சும் தான் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அதனால் இந்த சீரியலை பார்த்தால் பிபி, பிரஷர், சுகர் எல்லாம் ஏறுது என்று மக்கள் தொடர்ந்து விமர்சனம் செய்து இந்த நாடகத்தை பார்ப்பதை தவிர்த்து வருவதாக கமெண்ட் பண்ணி வருகிறார்கள். இதனால் சன் டிவி ப்ரைம் டைம் சீரியலில் மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகிறது.