மே 30 தியேட்டரில் வெளியாகும் 6 படங்கள்.. விஜய் சேதுபதிக்கு போட்டியாக வரும் பிக் பாஸ் பிரபலம்

Vijay Sethupathi : கடந்த வாரம் விஜய் சேதுபதி நடிப்பில் ஏஸ் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுகுறித்து பேசிய விஜய் சேதுபதி இந்த படம் வெளியானதே மக்களுக்கு தெரியவில்லை. இதற்கு காரணம் நாங்கள் தான்.

படத்தை உடனடியாக வெளியிட வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டதால் ப்ரோமோஷன் எதுவும் செய்யாமல் படம் வெளியாகிவிட்டது. ஆனாலும் மக்கள் கொடுக்கும் வரவேற்பை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்ததாக கூறியிருந்தார்.

ஆனால் இப்போது ஏஸ் படத்திற்கு போட்டியாக இந்த வாரம் ஆறு படங்கள் வெளியாகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்தவர் தான் முகேன் ராவ். இவர் டி ஆர் பாலு இயக்கத்தில் ஜின் படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகின்ற 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

மே 30 தியேட்டர் ரிலீஸ் 6 படங்கள்

அடுத்ததாக வெற்றி, பிரபு மற்றும் பலர் நடிப்பில் மகா கந்தன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ராஜபுத்திரன் படமும் இதே நாளில் வெளியாகிறது. நகைச்சுவை கலந்த குடும்ப படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது.

அடுத்ததாக ராம் இந்திரா இயக்கத்தில் உருவாகி இருக்கும் மனிதர்கள் படமும் வெளியாகிறது. ஒரே இரவில் ஐந்து நண்பர்கள் சிக்கிக் கொள்கிறார்கள். அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் பயத்தை மிகவும் பதட்டமாக இந்த படம் காட்டி இருக்கிறது.

பாக்யராஜ் மற்றும் மகேஷ் வைஷ்ணவி ஆகியோர் நடித்த ஆண்டவன் படமும் 30ஆம் தேதி வெளியாகிறது. அடுத்ததாக அஜய் தேவ்கன் மற்றும் யூத் தேவ்கன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் கராத்தே கிட் படமும் இதே நாளில் வெளியாகிறது.

சோனி பிக்சர்ஸ் இந்த படத்தை தயாரித்து உள்ள நிலையில் கராத்தே கிட் ட்ரெய்லர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆகையால் படத்தின் மீது ஆன எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகமாக இருக்கிறது. மேலும் அக்னி என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் வரலட்சுமி சரத்குமார் தி வெர்டிக்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படமும் வருகின்ற வெள்ளிக்கிழமை வெளியாகிறது.