5 மாசத்துல ஆறு படம் தான் ஹிட்.. தயாரிப்பாளர்களின் பரிதாப நிலை

Ajith : 2025 தொடக்கத்தில் இருந்து இப்போது ஐந்து மாதங்கள் நிறைவடைந்து விட்டது. தமிழ் சினிமாவில் இதுவரை நூற்றிற்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி இருக்கிறது. அதில் விரல் விட்டு என்னும் அளவில் ஐந்து படங்கள் மட்டும் தான் ஹிட்டாகி இருக்கிறது.

அதுவும் குறிப்பாக பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள் சரிவை சந்தித்து உள்ளது. அஜித்தின் விடாமுயற்சி, சூர்யாவின் கங்குவா படங்கள் போட்ட பட்ஜெட்டை கூட எடுக்க முடியாமல் திணறியது. இவ்வாறு பெரிய பட்ஜெட்டை போட்டு நஷ்டத்தை சந்தித்ததால் தயாரிப்பாளர்கள் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்த ஆண்டு வெற்றி பெற்ற ஆறு படங்களை பார்க்கலாம். சுந்தர் சி இயக்கத்தில் பல வருடங்களுக்கு முன் விஷால் நடிப்பில் எடுக்கப்பட்ட மதகஜராஜா படம் வெளியானது. இப்படம் எதிர்பார்க்காத அளவு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

இந்த வருடம் வெற்றி கொடுத்த ஆறு படங்கள்

அடுத்ததாக அஜித்துக்கு இந்த வருடம் விடாமுயற்சி படம் கைவிட்டாலும் குட் பேட் அக்லி வெற்றியை கொடுத்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை அஜித்தின் ஃபேன் பாயாக எடுத்திருந்தார். படம் தியேட்டரில் வசூலை அள்ளியது.

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் படமும் அமோக வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து மணிகண்டன் நடிப்பில் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட குடும்பஸ்தன் படமும் ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்று வெற்றி அடைந்தது.

சசிகுமார் மற்றும் சிம்ரன் ஆகியோர் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி வெளியானது. இந்த படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து இப்போதும் திரையரங்குகளில் வெற்றி நடை போடுகிறது. அதேபோல் சமீபத்தில் வெளியான மாமன் படமும் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்திருக்கிறது..