அட காவ்யா மாறன் எல்லாம் இப்போ கதை.. அனிருத் உடன் கிசுகிசுக்கப்பட்ட 5 பிரபலங்கள்!

Anirudh: கத்திரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு தான் வந்தாகணும் என்று சொல்வார்கள். அப்படித்தான் பிரபலங்களின் காதல் திருமணத்தை எட்டும் போது அதுவாகவே மீடியாவுக்கு வெட்ட வெளிச்சம் ஆகிவிடும்.

இந்த லிஸ்டில் தான் அனிருத் மற்றும் காவியா மாறன் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள். 4000 கோடி சொத்துக்கு அனிருத் அதிபதியாக போகிறார் என இரண்டு நாட்களாக ஒரே அக்கப்போர்.

இது எல்லாம் வெறும் வதந்தி என அனிருத் சாதாரணமாக முற்றுப்புள்ளி வைத்து விட்டார். அனிருத் இந்த விஷயத்தை சாதாரணமாக கடந்து செல்ல காரணம் உண்டு. ஏனென்றால் இதற்கு முன்பு பல பிரபலங்களுடன் கிசு கிசுக்கப்பட்டார். அப்படிப்பட்ட ஐந்து பிரபலங்களை பற்றி பார்க்கலாம்.

ஆண்ட்ரியா: அனிருத் மற்றும் ஆன்ட்ரியா காதல் வெறும் கிசுகிசு என்று கடந்து விட முடியாது. காதலுக்கு ஆதாரமாக இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியானது.

ஆனால் இருவருக்கும் இடையேயான வயது வித்தியாசம் காரணமாக பெற்றோர் ஒத்துக் கொள்ளாததால் இருவரும் பிரேக் அப் செய்து விட்டதாகவும் தகவல்கள் வெளியானது.

கீர்த்தி சுரேஷ்: கீர்த்தி சுரேஷ் வளர்ந்து வரும் கதாநாயகியாக இருக்கும்போதே அனிருத்துடன் காதலில் இருப்பதாக செய்திகள் வெளியானது.

இருவரும் திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு நெருக்கமாக இருக்கிறார்கள் என்று கூட சொல்லப்பட்டது. ஆனால் இந்த செய்தி காத்தோடு கலந்துவிட்ட வதந்தி தானே தவிர வேறு எந்த உண்மையையும் இதில் இல்லை.

ஜொனிடா காந்தி: டாக்டர் படம் ரிலீஸ் ஆன சமயத்தில் அனிருத் மற்றும் ஜொனிடா காந்தி தீவிர காதலில் இருக்கிறார்கள் என்று பேசப்பட்டது.

இருவரும் தொடர்ந்து பல இசைக்கச்சேரிகளில் பங்கேற்றதால் இந்த காதல் கதை பற்றி எரிந்தது. ஒரு கட்டத்தில் இரு தரப்பிலும் எதுவுமே உறுதி செய்யப்படாததால் வதந்தியாகவே காற்றில் கரைந்து விட்டது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: அனிருத்துடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வைத்து காதல் கதை கிளப்பப்பட்டதெல்லாம் விஷமிகளின் வேலை என்று கூற சொல்லலாம்.

ஏனென்றால் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் திருமணத்தின் போது அனிருத் வெறும் 12 வயது சிறுவன். அப்படி இருக்கும்போது தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்திற்கு அனிருத் தான் காரணம் என தேவையில்லாமல் ஒரு கிசு கிசு பரவியது.

காவ்யா மாறன்: அனிருத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

திடீரென கலாநிதி மாறனின் மகள் காவியா மாறனை அனிருத் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என கடந்த இரண்டு தினங்களாக செய்திகள் வெளியாகத் தொடங்கியது. ஆனால் இந்த செய்தியை வளர விடாமல் அனிருத் முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.