Ayyanar Thunai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற அய்யனார் துணை சீரியலில், நிலாவுக்கு தன்னுடைய குடும்பத்தை பற்றி தெரிந்த நிலையில் அவர்கள் வேண்டாம் என்று தூக்கி எறிந்து விட்டு சோழனுடன் கிளம்பிவிட்டார். அப்படி வெளியே வந்ததும் சோழன் ஒரு நிமிஷம் எனக்கு உள்ளே வேலை இருக்கிறது நான் போயிட்டு வருகிறேன் என்று சொல்லி வீட்டிற்க்குள் சென்று நிலாவின் அண்ணனை அடித்து பதிலடி கொடுத்து விடுகிறார்.
அத்துடன் என்னை கடத்திட்டு போன காரை நாங்கள் எடுத்துட்டு போகிறோம், வேண்டுமென்றால் யாரையாவது அனுப்பி சாவியை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கெத்தாக சொல்லி எல்லோரையும் வீட்டிற்கு காரிலேயே கூட்டிட்டு வந்து விடுகிறார். வீட்டிற்கு வரும் பொழுது நிலா குற்ற உணர்ச்சியில் பீல் பண்ணி அழ ஆரம்பித்து விட்டார். பிறகு சோழன் மற்றும் சேரன், நிலாவே சமாதானப்படுத்தி வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விடுகிறார்கள்.
வந்ததும் சோழன் என்னை அவமானப்படுத்தியதற்காக நான் அவர்களிடம் இருந்து இரண்டு தங்க காசை சூட் பண்ணி விட்டேன் என்று சொல்கிறார். உடனே சேரன் ஏண்டா இப்படி பண்ணுகிறாய் என்று திட்ட ஆரம்பிக்கும் பொழுது நிலா பரவாயில்ல இவர் இப்படி பண்ணலானா தான் எனக்கு கஷ்டமாக இருந்திருக்கும் என்று சொல்லிவிடுகிறார். அதே மாதிரி நானும் ஒன்று எடுத்துட்டு வந்திருக்கிறேன் என்று சொல்லி ஆதார் கார்டு, பான் கார்டு எல்லாத்தையும் கொண்டு வந்து விட்டேன் என காட்டுகிறார்.
அந்த வகையில் இரண்டு பேரும் ஜாடிக்கேத்த மூடியாகத்தான் இருக்கிறார்கள் என்று சொல்வதற்கு ஏற்ப நிலா சோழன் ஜோடி சரியாக அமைந்திருக்கிறது. ஆனால் இதற்கிடையில் வானதி போன் பண்ணும் பொழுது கோபமாக சண்டை போட்டு திட்டி போன் சுவிட்ச் ஆப் பண்ணிய பாண்டியனின் காதல் கேள்விக்குறியாக இருக்கிறது. வானதி கோபத்தில் இருப்பதால் பாண்டியன் என்ன சொல்ல வருகிறார் என்பதை கூட காது கொடுத்து கேட்க மாட்டார். ஆனாலும் பாண்டியன் நடந்து உண்மையை சொல்லி வானதியை சமாதானப்படுத்தி விடுவார்.