குணசேகரனுக்கு சங்கு ஊதிய ஈஸ்வரி.. அறிவுக்கரசி கையில் கிடைக்கும் ஆதாரம்

Ethirneechal 2 Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், தர்ஷினி மட்டுமே ஈஸ்வரியின் நிலைமைக்கு குணசேகரன் தான் காரணம் என்று சந்தேகப்படுகிறார். ஆனால் அதற்கு தகுந்த ஆதாரம் எதுவும் இல்லாததால் டாக்டர் சொல்லும் வரை வெயிட் பண்ணலாம் என்று அனைவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் ஈஸ்வரிக்கு நடக்க வேண்டிய ஆபரேஷன் எல்லாம் முடிந்த நிலையில் டாக்டர் சொன்னது என்னவென்றால் ஈஸ்வரி கழுத்தை நெரித்து தலையே சுவற்றில் மோதி இருக்கிறார்கள் அதனால் தான் ஈஸ்வரி இந்த நிலைமையில் இருக்கிறார் என்று டாக்டர் சொல்லிவிடுகிறார். அதனால் இதை வைத்து குணசேகரன் மீது குற்றவை ஆக்ஷன் எடுப்பார்.

ஆனால் குணசேகரனுக்கு எதிராக ஈஸ்வரி ஏற்கனவே வீடியோ ஆதாரத்தை நிரூபிக்கும் வகையில் செட் பண்ணி வைத்திருக்கிறார். அதாவது குணசேகர் இடம் பேசுவதற்கு முன் அந்த ரூமில் கேமராவை ஆன் பண்ணி வீடியோவை போனில் ரெக்கார்ட் பண்ணி இருப்பார். அந்த வகையில் குணசேகரனுக்கு சங்கு ஊதும் விதமாக ஆதாரம் இருக்கும்.

இருந்தாலும் அந்த ஆதாரம் குற்றவை கையில் கிடைப்பதற்கு முன் அறிவுக்கரசி கண்டுபிடித்து விடுவார். இதை வைத்து அறிவுக்கரசியும் சும்மா விட மாட்டார் பிளாக்மெயில் பண்ணும் விதமாக குணசேகரை ஆட்டிப்படைக்க போகிறார். மேலும் கனடாவிற்கு போக நினைத்த பார்கவி ஈஸ்வரியின் நிலைமையை கண்டு ஆஸ்பத்திரிக்கு திரும்ப வந்து விடுவார்.