விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், செந்தில் இப்பொழுதுதான் நிம்மதியாக இருக்கிறேன் என்று பெருமையாக குடும்பத்திடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது கோமதி, உன்னுடைய ஆபீசை பற்றி சொல்லு என்று கேட்ட பொழுது செந்தில் ஓவராக கத கதையாக சொல்கிறார்.
அதோடு விடாமல் மளிகை கடையில் வேலை பார்த்ததில் பட்ட கஷ்டங்களை சொல்லும் விதமாக பாண்டியனையும் வேலையும் கொஞ்சம் குறைச்சலாக எடை போட்டு விட்டார். உடனே கோமதி அந்த கடையில் வேலை பார்த்து தான் இவ்வளவு தூரம் நாம் வந்திருக்கிறோம். எப்பொழுதும் ஏறி வந்த பாதையை மறந்து விடாதே என்று சொல்கிறார்.
அடுத்ததாக தங்கமயில், சரவணன் வேலை முடித்துவிட்டு வரும்பொழுது நமக்கு ஏதாவது வாங்கிட்டு வருவார் என்று ஆசையுடன் காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் வழக்கம் போல் சரவணன், வேலை விஷயத்தில் மறந்து விட்டு வந்ததால் தங்கமயில் ஏமாற்றம் அடைந்து விட்டார்.
அடுத்ததாக கதிரும் ராஜியும் பேசிக்கொள்கிறார்கள், அப்பொழுது கதிர், எனக்கும் அப்பாவுக்கும் அடிக்கடி சண்டைகளும் மோதலும் ஏற்பட்டாலும் நான் அப்பா மாதிரி தான் என்று எல்லோரும் சொல்வார்கள் என கூறுகிறார். அதற்கு ராஜி, பொதுவாக ஆண் குழந்தைகள் அப்பா மாதிரியும் பெண் குழந்தைகள் அம்மா மாதிரி தான் இருப்பாங்க என்று பதில் சொல்கிறார்.
உடனே கதிர், உனக்கு குழந்தைகள் என்றால் பிடிக்குமா என கேட்கிறார். ஆமாம் ரொம்ப பிடிக்கும் என்று சொல்லிய பொழுது கதிர் எனக்கும் பிடிக்கும் என்று சொல்கிறார். அடுத்து உனக்கு பெண் குழந்தை பிறந்தால் அது உன்ன மாதிரியே சேட்டை பண்ணும் என்று சொல்கிறார். அதற்கு ராஜி வெட்கப்பட்டுக் கொண்டே ஆமாம் என்று சொல்கிறார்.
உடனே கதிர், அப்போ உனக்கு பிறக்க போற குழந்தை என்னை எப்படி கூப்பிடுமென்று பைத்தியம் மாதிரி கேள்வி கேட்க ஆரம்பித்தார். இதை கேட்டதும் ராஜி கோபத்துடன் கதிரை திட்டிக்கொண்டு புலம்ப ஆரம்பித்து விட்டார். கதிரும் நாம் தவறா கேள்வி கேட்டுட்டோமோ என்று என்ன சொல்வது என தெரியாமல் குழம்பிப் போய்விட்டார்.
மேலும் அரசி விஷயத்தில் தவறு பண்ணிய குமரவேலுவை பாண்டியன் ஜெயிலுக்கு அனுப்பினார். ஆனால் முத்துவேல் மற்றும் கதிர்வேல், குமரவேலுவை ஜாமினில் எடுத்துட்டு வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விடுகிறார்கள். குமரவேலுவை பார்த்த சரவணன், பாண்டியனிடம் சொல்கிறார். உடனே பாண்டியன் இதை வைத்து பிரச்சினை பண்ணும் விதமாக சண்டைக்கு போகப் போகிறார்.