மனோஜ் பணத்தை ஆட்டைய போட்ட ரோகிணி.. முத்துவிடம் வன்மத்தை கொட்டிய அருண்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், சீதாவின் தாலி பெருக்கு பங்க்ஷனுக்கு போன விஜயா அங்கே இருப்பவரிடம் நல்லா பேசி அன்பாய் இருப்பது போல் போட்டோக்களை எடுக்கிறார். பிறகு வந்தவேளை முடிந்துவிட்டது என்று விஜயா, பார்வதி கூட்டிட்டு கிளம்பி விடுகிறார். அதன் பிறகு முத்து சீதாவும் பேசிக் கொள்வதை பார்த்த அருணுக்கு பிடிக்கவில்லை.

அதனால் சீதாவை கூப்பிட்டு நீ இன்னும் சாப்பிடவே இல்லை. இந்த ஸ்வீட் ஆவது சாப்பிடு என்று கொடுக்கிறார். உடனே சீதா அந்த இனிப்பை வாங்கிக் கொண்டு மாமா இன்னும் சாப்பிடவில்லை என்று முத்தவிமிடம் கொடுக்கிறார். இதை பார்த்து அருளுக்கு கோபம் வருகிறது. பிறகு மறுபடியும் முத்துவிடம் பேசிக் கொண்டிருந்த சீதாவை, அருண் கூப்பிட்டு ரூம்குள் வேலை இருக்குது என்று கூட்டிட்டு போய் கதவை அடைத்து விடுகிறார்.

இதை பார்த்த முத்து என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக நிற்கிறார். ஆனால் இதையெல்லாம் நோட் பண்ணிய மீனா எனக்கு உங்க சூழ்நிலை புரிகிறது. ஆனால் இதற்காக கோபப்படாதீங்க என்று சாந்தப்படுத்துகிறார். அதற்கு முத்து நான் ஏன் கோபப்பட வேண்டும், சீதா சந்தோசமாக இருந்தால் போதும் என்று சொல்லி முத்து கிரிசை கூட்டிட்டு கிளம்பி விடுகிறார்.

அப்படி போகும்பொழுது கிரிஷுக்கு ஐஸ்கிரீம் வேண்டும் என்று கடையில் வாங்கிக் கொடுக்கிறார். அங்கே வந்த ரோகினியின் பிளாக்மெயில் தினேஷ் இவர்களை பார்த்ததும் ரோகிணிக்கு வீடியோ கால் பண்ணி எனக்கு பணம் கொடுக்கவில்லை என்றால் இப்பொழுதே முத்துவிடும் எல்லா உண்மையும் சொல்லிவிடுவேன் என்று மிரட்டுகிறார். உடனே ரோகிணி ஷோரூம் இல் லாக்கரில் வைத்திருந்த பணத்தை எடுத்து விடுகிறார்.

அதுவும் யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக கேமராவை ஆஃப் பண்ணிட்டு திருட்டு வேலையை பார்த்து விடுகிறார். அடுத்ததாக முத்து, சவாரியை இறக்கி விடுவதற்கு ஒரு கோவில் பக்கம் வருகிறார். அந்த கோவிலில் விஜயா அன்னதானம் கொடுப்பதை முத்து பார்த்து விடுகிறார். உடனே அம்மா கையில் சாப்பிடும் பாக்கியம் இதைவிட வேற எங்கேயும் கிடைக்காது என்று பாசத்துடன் உட்கார்ந்து விஜயாவிடம் செண்டிமெண்டாக பேசி சாப்பாடு வாங்கி சாப்பிட்டு சந்தோஷப்படுகிறார்.