பசுபதி செய்யும் அடாவடித்தனத்தால் வெளிவரும் காவிரியின் ரகசியம்.. ஆக்ஷனில் விஜய்

Mahanadhi: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், காவேரி விஜய் ஒன்று சேர்வார்கள் என்று எதிர்பார்த்த தருணத்தில் பாட்டியும் சித்தியும் செய்த சகுனி வேலையால் காவேரி, விஜயுடன் சேர்வதற்கு யோசிக்கிறார். எதனால் காவிரி மனம் திடீரென்று இப்படி மாறி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியாத விஜய், காவேரியின் பிரிவால் தத்தளிக்கிறார்.

அட்லீஸ்ட் காவேரி கர்ப்பம் என்கிற உண்மை வெளிவந்தால் சாரதா, விஜயின் பாட்டி சமாதானமாகி அவர்களே காவிரியும் விஜய்யும் சேர்த்து வைப்பார்கள். அதற்குப் பதிலாக பசுபதியின் ஆட்டம் ஆரம்பம் ஆகிவிட்டது. ஜாமினில் வெளியே வந்த பசுபதி, காவிரி விஜய் வீட்டுக்கு சென்று மிரட்டினார். ஆனால் விஜய் பதிலடி கொடுக்கும் விதமாக பசுபதி வீட்டிற்கு சென்று பசுபதி கையை உடைத்து விட்டார்.

இதனால் கோபமான பசுபதி, காவேரியையும் காவேரி குடும்பத்தையும் பழிவாங்க வேண்டும் என்று கொடைக்கானலில் இருக்கும் காவேரியின் வீடு தன்னுடையது என்று புதுசாக ஒரு பிரச்சினை பண்ண ஆரம்பித்து விட்டார். இந்த விஷயத்தை சாரதா, கங்காவிற்கு ஃபோன் பண்ணி சொல்லிய நிலையில் காவிரியின் பாட்டி, குமரன், காவிரி அனைவரும் கொடைக்கானலுக்கு கிளம்பி விடுகிறார்கள்.

இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட நவீனும் விஜய்யும் கொடைக்கானலுக்கு போகிறார்கள். அந்த வகையில் பசுபதி கொடுக்கும் டார்ச்சரால் காவிரி கஷ்டப்பட போகிறார். ஆனால் காவிரியை காப்பாற்றும் விதமாக விஜய் ஆக்ஷனில் களமிறங்க போகிறார். கலகம் பிறந்தால் தான் வழி பிறக்கும் என்று சொல்வதற்கு ஏற்ப பசுபதி செய்யப் போகும் அடாவடித்தனத்தால் காவிரி கர்ப்பமான விஷயம் அனைவருக்கும் தெரிய வரப்போகிறது.

இந்த விஷயம் சாரதாவுக்கு தெரிந்தவுடன் காவேரியை விஜயுடன் சேர்த்து வைக்க முதல் ஆளாக சாரதா தான் முன்வருவார். அதற்காக தான் இப்பொழுது பசுபதி ஆடப்போகும் ஆட்டத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மகாநதி டீம் அனைவரும் கொடைக்கானல் போகிறார்கள்.