க்ரிஷ் ஆசைக்காக ரோகிணி அம்மா எடுத்த அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் முத்து குடும்பம்

Sirkadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், டாக்டர் பட்டத்தை வாங்கி ஆக வேண்டும் என்று விஜயா செய்யும் அலப்பறைக்கு அளவே இல்லை. இதற்கு உடந்தையாக பார்வதியும் துணையாக இருப்பது தான் வேடிக்கையாக இருக்கிறது. அந்த வகையில் கோவிலில் விஜயா அன்னதானம் போடுகிறார். இதை பார்த்த முத்து, அம்மா கையில் சாப்பிட வேண்டும் என்று சென்டிமெண்டாக சாப்பிடுகிறார்.

அதோட வீட்டுக்கு வந்து என் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு விஷயம் நடந்திருக்கிறது அதை கண்டுபிடிங்கள் என்று சொல்லி அனைவரிடமும் புதிர் போடுகிறார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லும் பொழுது முத்து அதெல்லாம் இல்லை. அம்மா முதல்முறையாக எனக்கு பரிமாறி சாப்பாடு சாப்பிட்டு இருக்கிறேன் என்று பீல் பண்ணி சொல்லியதும் மொத்த குடும்பமும் அமைதியாகி விட்டார்கள்.

ஆனால் திருந்தாத விஜயா மனசு மட்டும் மாறவே இல்லை, அடுத்ததாக ஹாஸ்பிடல் இருக்கும் ரோகினியின் அம்மாவை பார்ப்பதற்கு கிரிஷை கூட்டிட்டு முத்துவும் மீனாவும் போகிறார்கள். போனதும் நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணலாம் என்று டாக்டர் வந்து சொல்கிறார்கள். அப்பொழுது கொஞ்சம் மருந்து மாத்திரை வாங்கணும் என்பதற்காக முத்துவும் மீனவும் மெடிக்கலுக்கு போய் விடுகிறார்கள்.

உடனே அங்கு இருந்த கிருஷ், பாட்டியிடம் நான் உங்க கூட வரவே இல்லை. எனக்கு மீனா முத்து உடன் இருப்பது தான் பிடித்து இருக்கிறது. அங்கே தாத்தா பாட்டி சுருதி என அனைவரும் என்னை நன்றாக பார்த்து பாசமாக பேசிக் கொள்கிறார்கள். நான் அங்கே இருந்து கொள்கிறேன் என்று சொல்கிறார். இதை கேட்டதும் ரோகிணி அம்மா சரி என்று சொல்லிவிடுகிறார்.

பிறகு முத்து மீனா வந்ததும் நாளைக்கு நாங்கள் வருகிறோம் என்று சொல்லி கிரிஷை கூட்டிட்டு போய் விடுகிறார்கள். உடனே அங்கே வந்த ரோகிணியிடம் க்ரிஷ் ஆசைப்பட்ட விஷயத்தை சொல்கிறார். அதற்கு ரோகிணி அதெல்லாம் ஒன்னும் தேவையில்லை நாளைக்கு நீ வீட்டுக்கு போ. அதே மாதிரி கிரிஷையும் கூட்டிட்டு போ என சொல்லி விடுகிறார்.

அடுத்ததாக மறுநாள் ஹாஸ்பிடல் இருக்கும் ரோகிணி அம்மாவை டிஸ்சார்ஜ் பண்ணலாம் என்று முத்து மீனா கிரிஷை கூட்டிட்டு வருகிறார்கள். ஆனால் வந்து பார்த்தால் ரோகிணி அம்மா நேற்று இரவே கிளம்பி விட்டதாக டாக்டர் சொல்லிவிடுகிறார். இதனால் அவர் எங்க போனார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் முத்து மீனா, கிரிஷை வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விடுகிறார்கள்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும் ரோகிணி அதிர்ச்சியாக நிலையில் விஜயாவும் நம்ம தலையில இந்த பையனை ஒப்படைத்துவிட்டு அவங்க எங்க போயிட்டாங்க என்று வாய்க்கு வந்தபடி பேச ஆரம்பித்து விடுகிறார். ரோகினிடமும் எங்கே போறேன் என்று சொல்லாமல் க்ரிஷ் ஆசைக்காக முத்து மற்றும் மீனாவிடம் ஒப்படைத்துவிட்டு அவர் சொல்லாமல் கண்காணாத இடத்திற்கு போய் விடுகிறார். இதனால் முத்துவின் குடும்பம் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.