Pandian Stores 2 serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், குமரவேலு ஜாமீன் பற்றி என்ன ஆச்சு என்று வடிவு முத்துவேலுவிடம் கேட்கிறார். அதற்கு முத்துவேல், குமரவேலு நாளைக்கு வெளியே வந்து விடுவான் என்று சொல்கிறார். அடுத்ததாக வடிவு, ராஜி அரசி மாதிரி தான் என்னுடைய வாழ்க்கையும் ஆனது என்று சொல்லி ஃபீல் பண்ணினாள்.
அப்படி என்றால் என்ன அர்த்தம் அரசியை அவங்க அப்பா வீட்டிற்கு கூட்டிட்டு போன மாதிரி நம்மளையும் வீட்டுக்கு அப்பா கூட்டிட்டு போவாங்க என்று எதிர்பார்ப்புடன் தான் ராஜி இருக்கிறாள். அதனால் நாம் அவளை நம் வீட்டுக்கு கூட்டிட்டு வந்துவிடலாம். ராஜி அன்றைக்கு சொல்லும் பொழுது கூட என்னுடைய உயிரை காப்பாற்றுவதற்காக தாலி கட்டினான் என்று தான் சொன்னாள்.
ஆனால் ஒரு முறை கூட நானும் கதிரும் மனதார காதலிக்கிறோம் என்று சொல்லவே இல்லை. அதனால் நம் மகளை திரும்ப கூட்டிட்டு வந்துவிடலாம் என்று வடிவு, முத்துவேலுவிடம் சொல்லிவிட்டார். முத்துவேல் இதுதான் சரி என்று ராஜியை வீட்டிற்கு கூப்பிட்டு வருவதற்கு தயாராகி விட்டார். அடுத்ததாக ராஜி, கதிர் சொன்ன விஷயத்தை யோசித்துப் பார்த்து அப்செட்டில் இருக்கிறார்.
உடனே மீனா என்ன ஆச்சு என்று கேட்ட பொழுது தங்கமயில், அரசி நம் வீட்டுக்கு திரும்ப வந்தது போல் ராஜிக்கும் அவங்க வீட்டுக்கு போய் விட வேண்டும் என்ற எண்ணம் இருக்கு போல என்ன சொல்கிறார். இதை கேட்டதும் ராஜிக்கு கோபம் அதிகமாகிவிட்டது. உடனே தங்கமயில் சொன்ன விஷயத்தை கதிரிடம் ராஜி சொல்கிறார். அதற்கு கதிர், அங்கு கேட்ட கேள்வியும் சரிதான, பரவால்ல எப்படி புத்திசாலித்தனமாக யோசித்து இருக்காங்க என சொல்கிறார்.
இதனால் ராஜி கதிரிடம் சண்டை போட்டு வெளியே போய் விடுகிறார். பிறகு குமரவேலு வீட்டிற்கு கூட்டிட்டு வந்ததும் சரவணன் பாண்டியனிடம் போய் சொல்கிறார். உடனே பாண்டியன் ஜாமினில் அவன் வெளியே வந்திருப்பான். ஆனால் அவனால் இனி அரசிக்கு எந்த பிரச்சினை வராது என்று சொல்லுகிறார். பிறகு குமரவேலுவிடம் ராஜியை திரும்ப வீட்டிற்கு கூட்டிட்டு வந்து விடுவோம் என்று வடிவு சொல்கிறார். அதனால் ஒட்டுமொத்த குடும்பத்துடன் சேர்ந்து ராஜி போய் கூப்பிட போகிறார்கள்.
ஆனால் ராஜி இனி அங்கே போய் வாழ்வதற்கு வழியில்லை. அதனால் நிச்சயம் கதிரின் பொண்டாட்டியாகவும் பாண்டியனின் மருமகளாகும் தான் இந்த வீட்டில் இருப்பார். ஒருவேளை ராஜி அப்படி அப்பா கூப்பிட்டதும் அங்கே போய்விட்டால் கதிர் அப்பொழுது தான் ராஜியின் காதலை உணர்ந்து ஃபில் பண்ண ஆரம்பிப்பார்.