விஜய் டிவி சீரியலை தோற்கடித்த சன் டிவி.. வெளிவந்த டாப் 5 டிஆர்பி ரேட்டிங்

Serial trp rating: ஒவ்வொரு வாரமும் சின்ன திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் எந்த சீரியல் அதிக புள்ளிகள் பெற்று டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஐந்து இடத்தை பிடித்திருக்கிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் வெளிவந்த டிஆர்பி ரேட்டிங்கில் முதல் ஐந்து இடத்தை பிடித்த சீரியல்களை பற்றி பார்க்கலாம்.

சிங்க பெண்ணே: வழக்கம் போல் இந்த ஒரு சீரியல்தான் டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகள் பெற்று முதலிடத்தை தக்க வைத்துக் கொள்கிறது. அதை போல் இந்த வாரமும் 10.55 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறது. ஆனந்தி கர்ப்பமான விஷயம் அனைவருக்கும் தெரிந்தாலும் இன்னும் மகேஷுக்கு மட்டும் தெரியாமல் இருக்கிறது. மேலும் அன்பு, ஆனந்தியையும் ஆனந்தி வயிற்றில் வளர குழந்தையும் முழு மனதுடன் ஏத்துக்க தயாராகி விட்டார்.

மூன்று முடிச்சு: சட்டபூர்வமாக நந்தினி தன்னுடைய மனைவியாக வேண்டும். அதன் பிறகு எல்லா உரிமைகளையும் கொடுத்து நந்தினிக்கு கொடுக்க வேண்டிய மதிப்பு மரியாதையும் கிடைக்கும் என்று பிளான் பண்ணி கல்யாணத்தை ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணுவதற்கு சூர்யா முடிவெடுத்துவிட்டார். அந்த வகையில் இவர்களுடைய ரிஜிஸ்ட்ரேஷன் விஷயம் சுந்தரவல்லிக்கு தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதால் அண்ணாமலை மற்றும் சூர்யா மறைத்து வருகிறார்கள். இந்த வாரம் 10.24 புள்ளிகளைப் பற்றி இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

கயல்: இத்தனை நாளாக மூர்த்தி கதாபாத்திரத்தை வைத்து உருட்டிய கயல் சீரியல் தற்போது சோனியா அகர்வால் மூலம் புது மூர்த்தியை கொண்டு வந்து விடுகிறார்கள். இனியாவது அடுத்த பிரச்சனையை தீர்த்து விட்டு எழில் கயல் சந்தோசமாக இருப்பது போல் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் 9.68 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

எதிர்நீச்சல் 2: இனிமேல் செண்டிமெண்ட்க்கு இடமே இல்லை என்று ஜனனி ஆவேசமாக முடிவெடுத்த நிலையில் இதுவரை குணசேகரன் மற்றும் கதிர் செஞ்ச தவறுகளை வெளிக்கொண்டுவந்து தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்று ஜனனி மும்மரமாக செயல்பட்டு வருகிறார். அத்துடன் ஈஸ்வரி தான் குணசேகரனுக்கு எதிராக சாட்சி சொல்வார் என்று ஜனனி சொல்லி இருந்தார். அதன்படி ஈஸ்வரி சீக்கிரத்தில் சுயநினைவுக்கு வந்துவிடுவார். இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 8.91 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது.

மருமகள்: பிரபு ஆதிரை வீட்டுக்குள் வந்து சத்யா செய்யும் அட்டகாசத்திற்கு அளவே இல்லை, ஆனாலும் பொறுமையாக டீல் பண்ண வேண்டும் என்று ஆதிரை பல விஷயங்களை விட்டுக் கொடுத்துப் போகிறார். தற்போது ஒரு மிரட்டலான ரெக்கார்டு வீடியோவை வைத்து மொத்த குடும்பத்தையும் ஆட்டிப்படைத்து வருகிறார். இதனால் சத்யாவிடம் இருந்து அந்த குடும்பத்தை எப்படி பிரபு ஆதிரை காப்பாற்ற போகின்றார்கள் என்பது தான் விறுவிறுப்பான கதையாக இருக்கிறது. இந்த வாரம் 8.81 புள்ளிகளைப் பற்றி ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

மேலும் எப்பொழுதுமே டிஆர்பி ரேட்டில் முதல் ஐந்தாவது இடத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்கும் ஆசை சீரியல் இடம் பிடித்து விடும். ஆனால் இந்த வாரம் ஐந்தாவது இடத்தை தவறவிட்ட சிறகடிக்கும் ஆசை ஆறாவது இடத்தையும் தவறவிட்டு 8.34 புள்ளிகளை பெற்று ஏழாவது இடத்தில் இருக்கிறது. சன் டிவி சீரியல் உடன் மோதிய விஜய் டிவி சீரியல் அப்பட்டமாக தோற்றுப் போய்விட்டது.