செவ்வாய்க்கிழமை, நவம்பர் 26, 2024

இந்தியில் வெற்றியே கொடுக்காத 10 தென்னிந்திய ஹீரோக்கள்.. போன வேகத்துல திரும்பி வந்துட்டாங்களே

தென்னிந்தியாவில் மிகப்பெரும் நடிப்பு வல்லவர்களாக அன்று முதல் இன்றுவரை பல நடிகர்கள் இருந்து வருகின்றனர். தற்போதும் கூட நிகரில்லா நடிப்பின் ஜாம்பவான்களாய் கமல், மம்மூட்டி, மோகன்லால் போன்றோர் திகழ்ந்து வருகின்றனர்.

இருப்பினும் இங்குள்ள சூப்பர் டூப்பர் ஸ்டார் ஹீரோக்கள் சிலர் இன்றுவரை ஹிந்தியில் ஒருபடம் கூட வெற்றி கொடுக்க முடியாமல் உள்ளனர். அவர்களை பற்றிய ஒரு டாப் 10 லிஸ்டை இந்த பதிவில் காண்போம்.

10. ரானா டகுபதி:

பாகுபலி படத்திற்கு பிறகு ராணாவை தெரியாத இந்தியர்களே இருக்க முடியாது அந்த அளவிற்கு ஒரே படத்தில் உலக அளவில் பிரபலமானவர். ஆனால் இவர் ஹிந்தியில் நடித்த Dum Maaro Dum படு தோல்வி அடைந்தது.

9. அஜித்:

தமிழில் பல சிறந்த படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் தனக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருந்தாலும் பாலிவுட் சென்று தோல்வியை அடைந்தார் அஜித். அதுவும் ஷாருக்கான் கூட நடித்த அசோகா படத்தில்தான் அந்த சம்பவம் நடந்தது. நல்ல வேலையாக அதில் அஜித் ஹீரோவாக நடிக்கவில்லை.

8. சுதீப்:

தெலுங்கில் சுதீப் நடித்திருந்த ஈகா திரைப்படம் தமிழில் மட்டுமல்லாது ஹிந்தியிலும் டப் செய்யப்பட்டு சக்கை போடு போட்டது. ஆனால் இவரது நேரடி ஹிந்தி படமான Phoonk தோல்வியடைந்தது.

7. வெங்கடேஷ்:

தொடர்ந்து ஆக்சன், ஆன்மிகம், காமெடி, செண்டிமெண்ட் என்று அனைத்து விதமான படங்களையும் மாறி மாறி ரசிகர்களுக்கு விருந்தளிக்கு நடிகர் வெங்கடேஷ். ஆனால் ஹிந்தியில் இவர் கரிஷ்மா கபூருடன் இணைந்து நடித்த அறிமுகப்படமான Anari சுத்தமாக ஓடவில்லை.

6. நாகார்ஜுனா:

நம் சமந்தாவின் மாமனாரான தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா ஹிந்தியில் நடித்த Kudah Gawah மற்றும் Zakhm போன்ற படங்கள் இவரது நடிப்பை பெருமைபடுத்தினாலும் வசூலில் வெற்றியடையவில்லை.

5. அரவிந்த் சாமி:

அரவிந்த் சாமி நடித்த ரோஜா திரைப்படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு பெரும்  வெற்றிபெற்றது. ஆனால் இவரது நேரடி ஹிந்தி படமான Raja Ko Rani Se Pyar Ho Gaya படம் வெற்றிபெறவில்லை.

4. ராம் சரண்:

மகதீரா என்ற படத்தின் மூலம் இந்திய அளவில் புகழ் பெற்ற ஹீரோ, மெகா ஸ்டாரின் மகன் என்ற புகழெல்லாம் இவர் நடித்த Zanjeer ஹிந்தி படத்தின் வெற்றிக்கு துணை புரியவில்லை. முதல் ஹிந்தி படமே படுதோல்வி அடைந்தது.

3. சூர்யா:

நடிப்பிற்காக வெகு சிலரே பல்வேறு கதாபாத்திரங்களை தேர்வு செய்வர், அதில் முக்கியமானவர் சூர்யா. இவர் நடித்த Raktra Charitra படம் இவரது நடிப்பை பற்றி ஹிந்தி திரையுலகினரை வியப்பாய் பேசவைத்தாலும் வெற்றி வாய்ப்பு எட்டாக்கனியாகவே அமைந்தது.

2. விக்ரம்:

கமலுக்கு பிறகு பல்வேறு சோதனை முயற்சிகளை செய்யும் ஒரே நடிகர், நடிப்பிற்காக தன்னை எந்த அளவிற்கும் வருத்திக் கொள்ளும் கலைஞன் விக்ரம். இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த Raavan படத்தின் மூலம் ஹிந்தியில் கால் பதித்தார். ஆனால் ராவண் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

1. சிரஞ்சீவி:

தெலுங்கு சினிமா உலகின் மெகா ஸ்டார், அன்று முதல் இன்றுவரை குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைத்து ரசிகர்களையும் தன்னுடைய நடிப்பால் கட்டிவைத்திருக்கும்  நடிகர் சிரஞ்சீவி.  இந்தியில் அறிமுகமான Aaj Ka Goonda Raj எதிர்பாரா விதமாக தோல்வி அடைந்தது.

- Advertisement -spot_img

Trending News